TASMAC: மதுபான விற்பனை மெஷின் எதற்கு...? பாயிண்டை பிடித்த டாஸ்மாக்!

TASMAC Vending Mission: ​டாஸ்மாக் சார்பில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையிலும், இந்த முன்னெடுப்புக்கான காரணம் குறித்தும் தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Apr 28, 2023, 11:17 PM IST
  • இந்த மிஷின், மதுபான கடைகளுக்கு உள்ளேயே வைக்கப்படும்.
  • 21 வயதிற்குட்பட்டோருக்கு இதிலும் விற்பனை செய்யப்பட மாட்டாது.
  • நுகர்வோரை தவிர பொதுமக்களால் இதனை பயன்படுத்த இயலாது.
TASMAC: மதுபான விற்பனை மெஷின் எதற்கு...? பாயிண்டை பிடித்த டாஸ்மாக்! title=

TASMAC Vending Mission: கார்டை உள்ளே செலுத்தினால், வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை நமக்கு தரும் இயந்திரத்தை ஏடிஎம் மெஷின் என்கிறோம். அதைப்போல, காசை உள்ளே செலுத்தி பொருள்களை பெறும் இயந்திரத்தை வெண்டிங் மெஷின் என்கிறோம். இந்த வெண்டிங் மெஷினைக் கொண்டு, டாஸ்மாக் நிறுவனம் தற்போது மது விற்பனையை தொடங்கியுள்ளது. 

அதாவது, மால்களில் உள்ள டாஸ்மாக் கடைகளின் உள்ளேயே நிறுவப்படும் இந்த மெஷினில், பணத்தை செலுத்தி நுகர்வோர் அதில் மதுபானத்தை, பெற்றுக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்த மெஷினை 21 வயதை அடையாத இளைஞர்கள், எளிமையாக பயன்படுத்தி மது பழக்கத்திற்கு அடிமையாகிவிடுவார்கள் என குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

குற்றச்சாட்டுகள்

இந்த வெண்டிங் மெஷினில் மதுபானத்தை எடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவின் மூலம் தான் பல்வேறு குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன. பொதுமக்கள் எளிமையாக அணுகும் வகையில், மதுபான விற்பனையை பரவலாக்குதற்கும் தான் இந்த திட்டத்தை முன்னெடுத்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையிலும், இந்த முன்னெடுப்புக்கான காரணம் குறித்தும் தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வைரல் வீடியோ

மேலும் படிக்க | டெல்லியில் உற்சாக வரவேற்பு! குடியரசுத் தலைவரை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அந்த அறிக்கையில்,"தமிழ்நாடு மாநில வாணிபக்‌ கழகத்தினால் (TASMAC)‌ 101 இடங்களில்‌ வணிக வளாக மதுபான சில்லறை விற்பனை கடைகள்‌ (Mall Shops) செயல்பட்டு வருகிறது. இச்சில்லறை விற்பனைக்‌ கடைகளில்‌ விற்பனை விலையை விட கூடுதல்‌ விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தன. இதனை தடுக்கும்‌ வகையில்‌ நான்கு (Mall Shops) மதுபான சில்லறை விற்பனைக்‌ கடைகளில்‌ மட்டுமே, கடைகளுக்கு உள்ளேயே தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம்‌ (Automatic Vending Machine) நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. 

எதற்கு இந்த மிஷின்?

இந்த தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம்‌ மூலம்‌ மதுபானங்கள்‌ விற்பனை செய்யப்படும்‌ போது அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட, கூடுதல்‌ விலைக்கு விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படுகிறது.

தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம்‌, வணிக வளாக சில்லறை விற்பனை கடைகளுக்கு (Mall Shops) உள்ளேயே நிறுவப்பட்டுள்ளது. மேலும்‌ தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம்‌ மூலம்‌ செய்யப்படும்‌ அனைத்து விற்பனைகளும்‌ கடைப்பணியாளர்களாகிய மேற்பார்வையாளர்கள்‌ மற்றும்‌ விற்பனையாளர்களின்‌ முன்னிலையிலேயே நடைபெறும்‌ வகையில்‌ நிறுவப்பட்டுள்ளது. 

விற்பனை எப்படி?

இந்த தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம்‌ மூலம்‌ கடைப்பணியாளர்களின்‌ முன்னிலையில்‌ கடைகளின்‌ உள்ளேயே மதுபானங்கள்‌ விற்பனை செய்யப்படுவதால்‌ 21 வயதிற்கும் குறைவானவர்களுக்கு மதுபானங்கள்‌ விற்பனை செய்யப்படமாட்டாது.

தானியங்கி மதுபான விற்பனை இயந்திரத்தினை கடைகளின்‌ பணி நேரமான நண்பகல்‌ 12.00 மணி முதல்‌ இரவு 10.00 மணி வரை Mall Shops திறந்திருக்கும்‌ நேரத்தில்‌ மட்டுமே பயன்படுத்த முடியும்‌. இவ்வியந்திரம்‌ கடைக்கு உள்ளேயே நிறுவப்பட்டுள்ளதால்‌ மதுபானம்‌ நுகர்வோர்‌ தவிர மற்ற பொது மக்களால்‌ அணுக முடியாது. இது குறித்து தவறான தகவல்‌ பரப்புவோர்‌ மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க | புனித தலத்திற்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு... இந்த மோசடியில் சிக்கிவிடாதீர்கள் - தப்பிக்க வழிகள் இதோ!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News