சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட வனத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்.,


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாயிகளுக்கு (Farmers) வன விலங்குகளால் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் பாதிப்புகள் குறித்து மக்களை நேரில் சந்தித்து குறைகள் கேட்கப்பட்டு விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு தொகை வழங்கப்படுகிறது. மனிதர்களால் வனவிலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் கேட்டுறிந்து வருகிறோம். இதற்கான முறையான தீர்வு காணப்படும். 


ALSO READ |  ஜெய் பீம் படத்தால் அடுத்த சிக்கலில் சூர்யா; 5 கோடி நஷ்ட ஈடு


தமிழகத்தில் வனப்பகுதிகள் 33 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் இல்லாவிட்டால் மனிதர்கள் வாழ முடியாத இடமாக மாறிவிடும். கோடிக்கணக்கான மரங்களை நடவு செய்யும் பணியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வனப் பகுதிகளை அதிகரித்து தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும்  27 சதவீதமாக உள்ள வனப்பகுதிகளை 33 சதவீத  வனமாக மாற்ற வேண்டும் அதற்கான முயற்சியில் தான் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.


ஆய்விற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தமிழகத்தில் வனப்பகுதிகளை 33 சதவீதமாக அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு விலங்குகள் பாதிப்பால் 2, 922 வழக்குகள் பதிவு  செய்யப்பட்டது. அதற்கான இழப்பீடு கடந்த ஆண்டு வழங்கப்படவில்லை.


ஆனால் இந்த ஆண்டு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.வனப் பகுதிகளை அதிகரிக்க தனி நிபுணர் குழு மூலம் மண் சார்ந்த மரங்களை வனப் பகுதிகள் முழுவதும் அதிகரிக்க செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மேலும் வன விலங்குகளுக்கு தேவையான உணவு முறைக்கு ஏற்ப தேவையான உணவுப்பயிர்கள் பயிரிடப்படும் என்றும் தெரிவித்தார்.


சேலம் (Salem) மாவட்டம குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவை பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் குழந்தைகள் பொழுதுபோக்கு மையமாக பயன்படுத்தும் வகையில் துரித நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா பிரச்சினை காரணமாக சுற்றுலா மேம்படுத்தும் பணி தளங்களை மேம்படுத்தும் பணி தொய்வு ஏற்பட்டிருந்தது தற்பொழுது பிரச்சனை குறைந்த நிலையில் பணிகள் விரைவாக விரைவாக செயல்படுத்த செயல்படுத்தப்படும் என தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.


ALSO READ |  சூர்யாவை விமர்சித்த அன்புமணிக்குத் தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR