காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே இன்று அதிகாலை பனப்பாக்கம் வனப்பகுதியில் சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புள்ளிமான் அடிபட்ட அந்த இடத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்தது. இளைஞர்கள் சிலர் சுற்றுலா சென்று விட்டு வாகனத்தில் திரும்பும் பொழுது புள்ளிமான் சாலையில் அடிபட்டு துடித்துக் கொண்டிருப்பதை கண்டு உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதன் அடுத்து அப்பகுதியில் பொதுமக்கள் சிலரும் கூடியுள்ளனர். மேலும் உடனடியாக அவர்களும் தகவல் தெரிவித்துள்ளனர்.


விபத்தில் படுகாயம் அடைந்த புள்ளி மானுக்கு சிகிச்சை அளிக்க பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும், சம்பவ இடத்திற்கு உரிய நேரத்தில்  வராததால் புள்ளிமான் பொதுமக்கள் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்தது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த புள்ளிமானுக்கு தண்ணீர் கூட கொடுக்கக் கூடாது என வனத்துறையினர் பொதுமக்களை எச்சரித்ததாகவும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றார்.


மேலும் படிக்க | மூன்று தடவை கருக்கலைப்பு ? - பின்வாங்கிய நடிகை சாந்தினி !


இந்நிலையில் வனத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் புள்ளிமான் உயிரிழந்ததால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள்   வண்டலூர் - வாலாஜாபாத் செல்லும் நெடுஞ்சாலையில் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால்  அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மான் உயிரிழந்த தொடர்பாக காவல்துறையினர் மற்றும் வனத்துறையினரிடம் தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. 


அதன் பின் சம்பவ இடத்திற்கு விரைந்த ஒரகடம் போலீசார் போரட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை சமாதானம் செய்தனர்.அதன் பின் உயிரிழந்த புள்ளி மாணை வனத்துறையினர் அங்கிருந்து எடுத்துச்சென்றனர்.


மேலும் படிக்க | தைரியமா? விடியலுக்கா? - பதிவு போட்ட சவுதாமணியின் கைதும் முழு பின்னணியும் !


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR