பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடி, பக்கிங்காம் தெருவில் உள்ள ஒரு வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை இரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திருட முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து சத்தம் கேட்டு வெளியே வந்த பொதுமக்கள் அந்த நபரை பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர், பின்பு அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். அங்கிருந்த பொதுமக்கள் அந்த நபரை விரட்டி சென்றபோது அருகில் இருந்த காலி மைதானத்திற்குள் எகிறி குதித்து விட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பெற்ற மகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய உதவிய தாய்! வீடியோ எடுத்து சித்ரவதை! என்ன நடந்தது?


அந்த நபரை பொதுமக்கள் தேடிய போது அங்கிருந்த பாழடைந்த கிணற்றில் விழுந்தது தெரியவந்தது. இதையடுத்து பூந்தமல்லி போலீசார் மற்றும் பூந்தமல்லி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அந்த நபரை தேடி பார்த்தனர். ஆனால் அந்த நபரை மீட்க முடியவில்லை. இன்று காலை மீண்டும் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடியபோது இறந்த நிலையில் அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


இதையடுத்து பூந்தமல்லி போலீசார் விசாரணையில் இறந்து போன நபர் திண்டுக்கல்லை சேர்ந்த சங்கர் கணேஷ்(29), என்பதும் பூந்தமல்லியில் தங்கி பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தததும் தெரியவந்தது. மேலும் போதையில் மோட்டார் சைக்கிளை திருட வந்த போது பொதுமக்கள் தங்களை அடித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் இரவில் ஓடியபோது கிணற்றில் விழுந்து இறந்தாரா? அல்லது தன்னை திருடன் என நினைத்து பொதுமக்கள் துரத்தி வந்து அடித்து விடுவார்களோ என பயந்து போய் ஓடியபோது தவறி விழுந்து இறந்தாரா? என்ற கோணத்திலும் பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


மேலும் படிக்க | கோவையில் சீனியரை நிர்வாணமாக்கி அடித்த ஜூனியர் மாணவர்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR