தேவர் ஜெயந்தி விழாவில் காவல்துறை வாகனத்தின் மேலேறி இளைஞர்கள் அட்டகாசம்
பசும் பொன் முத்துராமலிங்க தேவரின் 114 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 59 ஆவது குரு பூஜை விழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது.
பசும் பொன் முத்துராமலிங்க தேவரின் 114 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 59 ஆவது குரு பூஜை விழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், அனைத்துகட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், காவல்துறை வாகனத்தின் மேலேறி இளைஞர்கள் அட்டகாசம் செய்த வீடியோ வெளியாகியுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தேவர்குருபூஜை க்கு சென்றவர்கள் அத்துமீறிலில் ஈடுபவதை அதில் காணலாம்.
இன்று நடைபெற்று வரும் குருபூஜை விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்திற்கு சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். குரு பூஜை விழாவில் தேவர் சிலைக்கு பூஜைகள் நடத்தப்பட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் அதில் கலந்து கொண்டனர்.
ALSO READ |அசைவ பிரியர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி! தீபாவளிக்கு கறிக்கடை கிடையாது
நேற்று ராமநாதபுரத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் சசிகலா மலர்வளையம் வைத்துமரியாதை செலுத்திய நிலையில், தேவர் குரு பூஜை நிகழ்வில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்துகொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ALSO READ | குற்றம்சாட்டிய பெண்ணுடன் சேர்ந்து உணவருந்திய அமைச்சர் சேகர்பாபு!
முன்னதாக நேற்று, எதிர்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏப்ரல் மாதம் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட குடலிறக்க அறுவைச் சிகிச்சை காரணமாக வயிற்று வலி ஏற்பட்டுள்ளதால், அவரை மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெறும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்பட்டது. எனினும் தேவர் ஜெயந்தி விழாவை புறக்கணிப்பதற்காக எடப்பாடி பழனிசாமி மருத்துவமனை சென்றாரா என்ற பேச்சும் கட்சிக்குள்ளே எழுந்தது.
ALSO READ| பட்டாசு வெடிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழக அரசு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR