வரும் நவம்பர் 4ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி, பாதுகாப்பை கருத்தில் கொண்டு பட்டாசு வெடிக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மாநில பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில், பட்டாசு வெடிக்கும் போது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
1. பெற்றோர் மேற்பார்வையில் தான் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
2. எளிதில் தீ பற்றக் கூடிய வகையில், பட்டாசுகளை வைக்காமல் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
3. மிக முக்கியமாக. சானிடைசர் பயன்படுத்திய பிறகு பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. சானிடைஸரில் ஆல்கஹால் உள்ளதால், அது எளிதில் தீபிடிக்கும் என்பதால் மிகுந்த எச்சரிக்கை தேவை.
ALSO READ | எடப்பாடி பழனிசாமி தனியார் மருத்துவமனையில் அனுமதி
4. வெடித்த பிறகு அவை எளிதில் தீப்பிடிக்காத அளவுக்கு அப்புறப்படுத்த வேண்டும்.
5. பட்டாசு வெடித்த பிறகு, சிதறியவற்றை சேகரித்து எரியக்கூடிய பொருட்களில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்.
6. சுவாசப் பிரச்சனை இருப்பவர்கள் வீட்டுக்குள்ளேயே இருந்தால், உடல் நல பிரச்சனை ஏற்படுவதை தவிர்க்கலாம்.
7. பட்டாசு வெடிக்கும் போது, முடிந்த வரை விலகி நின்று பட்டாசுகளை வெடிக்க வேண்டும். தீப்படித்தால் உடனே அணைக்கும் வகையில், தண்ணீர் வாளிகள், தீ அணைப்பு உபகரணங்கள் மற்றும் போர்வையை போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
8. பட்டாசுகளை பயன்படுத்திய பிறகு சோப்பு தண்ணீரால் கைகளை கழுவ வேண்டும்.
9. மின்சார கம்பம், கம்பிகளுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். பாதி எரிந்த பட்டாசுகளை தூக்கி எறியக் கூடாது. பட்டாசுகளை வெடிக்க தீப்பெட்டி, லைட்டர்களை பயன்படுத்தக் கூடாது.
ALSO READ: ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி! விளக்கம் அளித்த லதா ரஜினிகாந்த்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR