யூடியூபர் மாரிதாஸ் கைது - காரணம் என்ன?
சமூகவலைதளங்களில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பதிவிட்ட யூடியுப்பர் மாரிதாஸ்ஸை காவல்துறையினர் கைது செய்தனர்
சமூகவலைதளங்களில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பதிவிட்ட யூடியுப்பர் மாரிதாஸ்ஸை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக இரு தரப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ALSO | அமமுகவினர்க்கு அண்ணா சதுக்கம் போலீசார் சம்மன்!
யூடிப்பரான மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக ஆட்சியின் கீழ் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா எனவும் , தேசத்திற்கு எந்த பெரிய துரோகத்தையும் செய்யக் கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ள இங்கே சுதந்திரம் இருக்கும் என்றால், அங்கே எந்த பெரிய சதி வேலை நடக்கவும் சாத்தியம் உண்டு. பிரிவினைவாத சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும் எனவும் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் மதுரை புதூர் சூர்யாநகர் பகுதியில் உள்ள மாரிதாஸின் வீட்டிற்கு சென்ற புதூர் காவல்துறையினர் பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் கைது செய்வதாக கூறி மதுரை புதூர் காவல்நிலையத்திற்கு அழைத்துவந்தனர். இதனையடுத்து மாரிதாஸின் கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்நிலையத்தை முற்றுகையிட்டு பாஜக மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் ஏராளமான பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறையினருக்கும் , பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில் மாரிதாஸிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
கடந்த வருடம் தனியாா் தொலைக்காட்சி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக விமா்சித்ததாகவும், அந்நிறுவனத்தின் பெயரில் போலியான மின்னஞ்சல் மூலம் தவறான செய்தி அனுப்பியதாகவும் மாரிதாஸ் வீட்டில் சோதனை நடைபெற்றது. சென்னை உயா்நீதிமன்றத்திலும் அவா் மீது வழக்கு தொடரப்பட்டு இருந்தது. மேலும் கொரோனா பரவலுக்கு இசுலாமியர்கள் தான் காரணம் என்று பொய் தகவல் பரப்பிய குற்றத்திற்கும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ALSO | இனி தமிழில்தான் இனிஷியல்: பள்ளி கல்லூரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR