தொழில்நுட்பங்கள் இல்லாத இடமில்லை. அதனை சரியாக பயன்படுத்துவதில் தான் இருக்கிறது நம்முடைய சாமார்த்தியம். ஒருவேளை நீங்கள் ஏற்கனவே பயணத்திற்கு திட்டமிட்டிருந்தீர்கள் அல்லது திட்டமிடப்போகிறீர்கள் என்றால், டெக்னாலஜி விஷயத்தில் நீங்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும், உங்கள் பயணத்துக்கு உதவும் டெக் டிப்ஸ்கள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1. முக்கியமான ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குங்கள்


உங்களுக்குத் தேவைப்படும் ஒவ்வொரு முக்கியமான ஆவணத்தின் நகலையும் எடுத்துக்கொண்டு பயணம் செய்வது நல்லது. இருப்பினும், அதிகரித்து வரும் டிஜிட்டல் உலகில், நீங்கள் காகித பேப்பர்களை நம்பியிருக்க முடியாது. அதனால், உங்கள் பயண ஆவணங்கள் அனைத்தையும் புகைப்படங்கள் அல்லது ஸ்கேன் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அவற்றை இமெயில், ஸ்மார்ட்போன் மற்றும் USB ஸ்டிக்கில் சேமிக்கவும்.


2.VPN குறித்த அட்வைஸ்


வெளியூர்களுக்கு அல்லது வெளிநாடுகளுக்கு நீங்கள் பயணம் செய்கிறீர்கள் என்றால், பொது இடங்களில் இலவசமாக கிடைக்கும் வைஃபையை பயன்படுத்தக்கூடும். அந்த நேரத்தில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதாவது, பொது இடங்களில் கிடைக்கும் இலவச வைஃபை பயன்படுத்தும்போது விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க்குகளை பயன்படுத்துங்கள். ஏனென்றால், பொது வைஃபை மூலம் ஹேக்கர்கள் உங்கள் தகவல்களை திருட வாய்ப்புள்ளது. இதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், இந்த டிப்ஸை உபயோகிக்க வேண்டும்.  


மேலும் படிக்க | நாளை மோட்டோரோலா எட்ஜ் 30 வெளியீடு; இன்று முக்கிய அம்சங்கள் கசிந்தது


3. .தரவுகளை சேமித்தல்


பொது இடங்களில் அதிகப்படியான திருட்டுகள் அரங்கேறுகின்றன. சுற்றுலா தளங்களில் சொல்ல வேண்டியதில்லை. ஏனென்றால், திருடர்கள் குறிவைத்து திருடுவார்கள். அவர்களின் சாமார்த்தியத்துக்கு முன்பு நாம் கவனமாக இருக்க வேண்டும். ஒருவேளை உங்கள் டிஜிட்டல் உபகரணங்கள் திருடுபோய்விட்டால், அதனை மீட்பது என்பது கடினமானதாக மாறிவிடும். அதனால், முன்கூட்டியே உங்கள் தரவுகளை, அதாவது மடிக்கணிணிகளில் இருக்கும் டேட்டாவை கிளவுட் உள்ளிட்டவற்றில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.  


4. வெறென்ன தேவை


ஸ்மார்ட்போனை ‘Find my Phone' டிராக்கருக்கு உதவும் வகையில் செட்டிங்ஸில் மாற்றம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை உங்கள் ஸ்மார்ட்போன் தொலைந்துவிட்டால், உடனடியாக இந்த டெக்னாலஜியை பயன்படுத்தி டிராக் செய்ய முடியும். வேறு மொழி பகுதிக்கு நீங்கள் செல்கிறீர்கள் என்றால், மொழிப்பெயர்ப்பாளர் அவசியம். வெளி நாடுகளுக்கு செல்கிறீர்கள் என்றால், நாணய மாற்றம் குறித்த தகவல்களை முன்கூட்டியே தெரிந்து வைத்திருக்க வேண்டும். செல்ல வேண்டிய இடங்கள், தங்கும் இடம் தகவல்களை உங்கள் மொபைலில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். 


5. போலி இணைய தளங்கள்


போலி இணையதளங்கள் குறித்து விழிப்பாக இருக்க வேண்டும். அதிகாரப்பூர்வ தளங்களில் மட்டுமே தகவல்களை பதிவிட வேண்டும். உதாரணமாக, டிக்கெட் முன்பதிவிற்காக பணப்பரிமாற்றம் செய்யும்போது பணத்தை இழக்க நேரிடும். இவற்றில் நீங்கள் விழிப்பாக இருக்க வேண்டும். உள்நாட்டுக்குள் பிரச்சனை இல்லை. வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்யும்போது இணையதளங்கள் வித்தியாசமாக இருக்கும். இவற்றில் நீங்கள் விழிப்பாக இருந்தால், தொந்தரவில்லாத அழகான பயணத்தை மேற்கொண்டு வீட்டுக்கு திரும்பலாம். 


மேலும் படிக்க | இண்டர்நெட் ஸ்பீடில் கலக்கும் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR