Realme Narzo 50 Pro 5G ஸ்மார்ட்போன் அப்டேட் மாஸாக வெளியாகியிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை உறுதி செய்துள்ள அந்த நிறுவனம் மொபைல் குறித்த அப்டேட்டுகளை பகிர்ந்து கொள்ளவில்லை. 5 ஜி ஸ்மார்ட்போனாக வரும் இந்த மொபைல், இண்டர்ஸ்பீடில் மிக வேகமாக இருக்குமாம். ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆன்லைனில் கலக்கும் அமேசான் நிறுவனம் இந்த போன் குறித்த தகவல்களை ஆன்லைனில் பகிர்ந்து கொண்டுள்ளது.
மேலும் படிக்க | Flipkart Sale: ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவிகளுக்கு சிறப்பு தள்ளுபடி
அதேநேரத்தில் எப்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என்ற தகவலை ரகசியமாக வைத்திருக்கிறது ரியல்மீ நிறுவனம். மார்க்கெட்டில் இருக்கும் போட்டியால் போனின் அம்சங்கள் குறித்த தகவலும் வெளியாகவில்லை. டிராக்கர்கள் வெளியிடுள்ள தகவல்களின்படி, கூலிங் தொழில்நுட்பம் பெஸ்டாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். இப்போது லீக்காகியிருக்கும் போனின் முன் பக்க புகைப்படங்களும் அசத்தலாக இருக்கின்றன. அதில், செல்பி கேமராவுக்காக இடது பக்கம் சீரமைக்கப்பட்ட பஞ்ச் துளை காணப்படுகிறது.
RMX3396 மாடல் எண் கொண்ட Realme Narzo 50 Pro 5G ஸ்மார்ட்போனில் AR கோர் இருக்கும் என தெரிவித்துள்ள டிராக்கர்கள், மீடியாடெக் டைமன்சிட்டி 920 SoC 6ஜிபி ரேம் உடன் வெளிவரும் என தெரிவித்துள்ளனர். 91Mobiles வெளியிட்டுள்ள தகவலின்படி, Realme Narzo 50 Pro 5G ஆனது ஆண்ட்ராய்டு 12 அவுட்-ஆஃப்-பாக்ஸை அடிப்படையாகக் கொண்ட Realme UI 3.0 இல் இயங்கக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 920 SoC மூலம் இயங்கும் என்றும், 6GB வரை ரேம் உடன் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | மிக குறைந்த விலையில் iPhone 12, iPhone 12 Mini வாங்க அரிய வாய்ப்பு
90Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.58-இன்ச் AMOLED பேனலைக் கொண்டிருக்கும் என்றும் அந்த தளம் குறிப்பிட்டுள்ளது. புகைப்படங்கள் மற்றும் கேமராவைப் பொறுத்த வரை Realme Narzo 50 Pro 5G ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா ஆகியவற்றைக் கொண்ட டூயல் கேமரா இருக்குமாம். செல்பி மற்றும் வீடியோ சாட்களுக்காக முன்பக்கம் பயன்படுத்தப்படும் செல்பி கேமார 8 மெகா பிக்சலில் இருக்குமாம். 33W சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,800mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்றும் டிராக்கர்கள் கூறியுள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR