போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டுக்கு உதவினால் வீடியோ கேம்கள் இலவசமாக வழங்கப்படும் என பிரபல இணையதளம் அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரஷ்யா- உக்ரைன் இடையே போர் நிலவிவரும் நிலையில், மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் இந்தியாவுக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.இரு நாடுகளுக்கு இடையேயான இந்த போரானது, உலக நாடுகளையும் பலவகைகளில் பாதித்துள்ளது.  போரால் கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதால் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து, உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.


இதனிடையே போரில் உக்ரைனுக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்துள்ள நிறுவனங்கள் பல்வேறு வகைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் உக்ரைனுக்கு உதவி வருகின்றன. ரஷ்யாவின் பொருளாதாரத்தை மட்டும் விதமான நடவடிக்கைகளிலும் பல நிறுவனங்கள் இறங்கியுள்ளன. அமேசான் நிறுவனமும்கூட உக்ரைனுக்குத் தேவையான உதவிகளை செய்யவுள்ளதாக அறிவித்திருந்தது. அந்த வரிசையில், தற்போது பிரபல இணையதளமான இட்ச்.ஐஓ (itch.io) தளமும்,
உக்ரைனுக்கு உதவ முன்வந்துள்ளது.


                                                                                          


மேலும் படிக்க | உக்ரைன் மீது ரஷ்யா உயிரியல் ஆயுதங்களை பயன்படுத்தக்கூடும்: அமெரிக்கா எச்சரிக்கை


அந்த வகையில், கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டுக்கு நிதியுதவி வழங்கத் திட்டமிட்டுள்ள அந்நிறுவனம், உக்ரைன் மக்களுக்குக் குறைந்த பட்சம் 10 டாலர்களேனும் நிதியுதவி வழங்கும் பட்சத்தில் அவர்களுக்கு இலவசமாக 1000 மேற்பட்ட கேம்கள், டிஜிட்டல் புத்தகங்கள் மற்றும் காமிக்ஸ்களை வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. இதில் 566 வீடியோ கேம்கள், 317 டேபிள் டாப் கேம்கள் உள்ளிட்டவை வழங்கப்படவுள்ளன. இதற்காக 700க்கும் மேற்பட்ட கேம் தயாரிப்பாளர்கள் உதவ முன்வந்துள்ளனர். போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்கு உதவ ரூ.7.64 கோடி சேர்ப்பதே தங்களது இலக்கு எனக் கூறியுள்ள அந்நிறுவனம், இதுவரை 75 சதவீத இலக்கை அடைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | உக்ரைன் அதிபர் எங்கே இருக்கிறார்? அவர் வெளியிட்ட வீடியோ


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR