உக்ரைன் அதிபர் எங்கே இருக்கிறார்? அவர் வெளியிட்ட வீடியோ

உக்ரைன் அதிபர் அண்டை நாட்டில் தஞ்சம் புகுந்துவிட்டதாக கூறி வரும் நிலையில், தான் எங்கே இருக்கிறேன் என்ற வீடியோவை ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 04:26 PM IST
  • அண்டை நாட்டில் தஞ்சம் புகுந்தாரா உக்ரைன் அதிபர்
  • புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்
  • அதில், தான் எங்கே இருக்கிறேன்? எனக் கூறியுள்ளார்
உக்ரைன் அதிபர் எங்கே இருக்கிறார்? அவர் வெளியிட்ட வீடியோ title=

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளும் தங்களின் கோரிக்கைகளில் பிடிவாதமாக இருப்பதால், போர் மேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேட்டோ அமைப்பில் சேருவதற்காக உக்ரைன் எடுத்த முயற்சியால் கோபமடைந்த ரஷ்யா, போரை அறிவித்து உக்கிரமாக நடத்தி வருகிறது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸிகியும், ரஷ்யா நடத்தும் தாக்குதலில் இருந்து பின்வாங்காமல் போரை முன்னெடுத்து வருகிறார்

மேலும் படிக்க | உக்ரைன் ராணுவத்தில் கோவை மாணவர் - பேனா பிடித்த கைகளில் துப்பாக்கி ஏந்திய பின்னணி! 

இந்தப் போரில் பயன்படுத்தும் ஆயுதங்கள் கவலையை ஏற்படுத்தியுள்ளன. சக்திவாய்ந்த குண்டுகள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் உக்ரைன் ரஷ்யா மக்களிடையே மட்டுமின்றி, உலக மக்களிடையேயும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. உக்ரைனில் இருக்கும் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் மிகப்பெரிய ஆபத்துகள் உருவாகலாம் என்றும் உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. ஆனால், ரஷ்யாவைப் பொறுத்தவை தங்களின் கோரிக்கைகளுக்கு உக்ரைன் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என தெளிவாக கூறிவிட்டது. இதனைத் தொடர்ந்து தாக்குதலை நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வரும் ரஷ்யா, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி போரை நடத்தாமல் அண்டை நாட்டில் தஞ்சம் அடைந்துவிட்டதாக கூறியது. இதனை உக்ரைன் சார்பில் மறுக்கப்பட்டது.

மேலும் படிக்க | உக்ரைன் நெருக்கடி இந்தியா- ரஷ்யா உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா ..!!!

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஜெலன்ஸ்கி, நான் எங்கும் ஓடவில்லை எனத் தெரிவித்துள்ளார். உக்ரைன் தலைநகர் கிவ் பாங்கோவாவில் இருப்பதாக கூறியுள்ள அவர், யாருக்கும் பயப்பட மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். இந்த தேசபக்தி போரல் வெற்றி பெறுவதற்கு என்ன தேவையோ அதை செய்வோம் என்றும் அவர் மீண்டும் ஒருமுறை கூறியுள்ளார். இதனிடையே, உக்ரைன் அதிபரின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவரை பத்திரமாக வெளியேற்ற இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகள் முயற்சியை மேற்கொண்டுள்ளன. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News