தவறான வதந்தி பரப்பப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசிடம் வாட்ஸ் அப் உறுதி!! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா முழுவதும், கடந்த சில மாதங்களாக குழந்தை கடத்தல் என்ற வதந்திகளை நம்பி பலபேர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். சாதாரணமாக யாரவது குழந்தை அருகில் சென்றாலே, அவர்களைக் குழந்தை திருடும் கும்பல் என நினைத்து, ஒரு கூட்டமே சேர்ந்து ஒருவரைத் கொடூரமாக தாக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இது போன்ற சம்பவங்களினால்,  இந்தியா முழுவதும் இதுவரை சுமார் 30 பேர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக தெவித்துள்ளனர். 


இதையடுத்து, வாட்ஸ்அப் மூலம் பகிரப்பட்டுவரும் வதந்திகளால், தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு எச்சரித்தது. இதை தொடர்ந்து, மத்திய அரசுக்கு வாட்ஸ்அப் நிர்வாகம் விளக்கம் தந்துள்ளது. 


அதில், வதந்தி பரப்பப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசிடம் வாட்ஸ் அப் உறுதி கூறியுள்ளது. தவறான தகவல்கள், வதந்திகளைத் தடுப்பது சவாலான பணியாக இருக்கிறது என்றும் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது!