வெறும் ரூ.5,000 செலுத்தி Honda WR-V-ஐ புக் செய்யலாம்: இதோ வழிமுறை
நீங்கள் ஒரு காரை வாங்க அல்லது முன்பதிவு செய்ய திட்டமிட்டிருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது!!
Honda WR-V: இந்தியாவில் பண்டிகை காலம் துவங்கவுள்ளது. இது புதிய பொருட்கள், வாகனங்களை வாங்குவதற்கான நேரம். நீங்கள் ஒரு காரை வாங்க அல்லது முன்பதிவு செய்ய திட்டமிட்டிருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது!!
இந்த பண்டிகைக் காலத்தில் ஹோண்டா WR-V-ஐ (Honda WR-V) வெறும் 5,000 ரூபாய்க்கு முன்பதிவு செய்ய நல்ல வாய்ப்பு வந்துள்ளது. கார் (Cars) வாங்க விருப்பம் கொண்டவர்கள், ஹோண்டா நிறுவனத்தின் 'ஹோண்டா ஃப்ரம் ஹோம்' சேவை ('Honda From Home' service) மூலம் இதைச் செய்யலாம்.
"முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடி பயணங்களை அனுபவிக்க நல்ல வாய்ப்பு. ஹோண்டா ஃப்ரம் ஹோம் மூலம் வெறும் 5000 ரூபாய் என்ற விலையில் புதிய ஹோண்டா WR-V-ஐ புக் செய்யுங்கள்” என்று ஹோண்டா கார் இந்தியா ட்வீட் செய்தது.
மேலும், நிறுவனம் வழங்கிய தகவலின்படி, நிறுவனத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில், வாகன முன்பதிவை ரத்து செய்யும் (cancelled bookings) வாடிக்கையாளர்களுக்கு அவர்களது தொகை 100 சதவீதம் திருப்பித் தரப்படும்.
இந்த காரை 5 எளிய முறைகளில் புக் செய்யலாம்:
1. www.hondacarindia.com இல் உள்நுழைந்து 'Book Now'-ல் கிளிக் செய்யவும்.
2. உங்களுக்கு விருப்பமான ஹோண்டா கார் (Honda Car), காரின் வகை மற்றும் வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
3. அதன் பின்னர் உங்கள் அருகில் உள்ள டீலரைத் தேர்ந்தெடுக்கவும்.
4. உங்கள் தொடர்பு விவரங்களை நிரப்பவும்.
5. பணம் செலுத்துவதற்கு முன் உங்கள் தனிப்பட்ட விவரங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட கார் மற்றும் டீலர் ஆகியவற்றைச் சரிபார்க்கவும்.
வாடிக்கையாளர்கள் ஹோண்டா காரை ஆன்லைனிலும் வாங்கலாம். அதற்கான வழிமுறைகள் இதோ:
1. www.hondacarindia.com இல் உள்நுழைந்து 'Buy Now'-ல் கிளிக் செய்யவும்.
2. கிடைக்கக்கூடிய மாடல், எரிபொருள் வகை, டிரான்ஸ்மிஷன், மாறுபாடு, விலை மற்றும் வண்ணம் ஆகியவற்றின் அடிப்படையில் உங்களுக்கு பிடித்த ஹோண்டா காரைத் தேர்ந்தெடுக்கவும்.
3. மாதாந்திர டீல்கள், பரிமாற்ற சலுகைகள், லாயல்டி போனஸ் மற்றும் கார்ப்பரேட் சலுகை போன்ற பொருந்தக்கூடிய சலுகையைத் தேர்ந்தெடுக்கவும்.
4. கோட்-ஐ உருவாக்கி சாலை விலை மதிப்பீட்டைப் பெறவும்.
5. நிதி உதவிக்கான வசதிகளை ஆராய்ந்து EMI-ஐ கணக்கிடுங்கள்.
6. உங்களுக்கு விருப்பமான விநியோக இடத்தை (delivery location) தேர்வு செய்யவும்.
ALSO READ: இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக் எது தெரியுமா; விற்பனை தகவல் வெளியீடு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR