HackerGPT: AI மூலம் அருகில் இருப்பவரின் பாஸ்வேர்டு, வங்கி கணக்கு விவரங்களை திருடலாம்
ஏஐ மூலம் அருகில் இருக்கும் ஒருவரின் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் பாஸ்வேர்டு ஆகியற்றை துல்லியமாக திருட முடியும். இதனை ஒரு ஆய்வு மூலம் தொழில்நுட்ப வல்லுநர்கள் கண்டிபிடித்திருக்கிறார்கள்.
கார்னெல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு, பாஸ்வேர்டு, ஒருவரின் வங்கி விவரங்கள் உள்ளிட்ட தரவுகளைக் கொண்ட ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் எவ்வாறு சட்டவிரோதமாகப் பெற முடியும் என்பது குறித்து ஆச்சரியமூட்டும் வகையில் ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளனர். பெரும்பாலான AI போட்கள் கணினியில் தட்டச்சு செய்யும்போது உருவாகும் கீ சத்தங்களைக் கொண்டு என்ன எழுத்துகள் என்பதை கண்டுபிடிக்கும் ஒரு முறையை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதன் மூலம் அருகில் இருக்கும் ஒருவரின் பாஸ்வேர்டு, வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் சட்டவிரோதமாக செயற்கை நுண்ணறிவு பெற்றுக் கொள்ள முடியும். இதில் கவலைப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் இப்போதும் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பெரும்பாலான ஏஐ தொழில்நுட்பங்களால் இதை செய்ய முடியுமாம். மிகவும் சிக்கலான கடவுச்சொற்களைக் கூட 95 சதவிகிதம் துல்லியத்துடன் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களால் கணிக்க முடியும்.
மேலும் படிக்க | இந்த ரகசியங்களை வங்கிகள் ஒருபோதும் நம்மிடம் சொல்ல மாட்டார்கள்!
எப்படி ஏஐ பாஸ்வேர்டு திருடும்?
சாட்ஜிபிடி ஹேக்கிங் அம்சம் கொண்ட ஒரு மொபைலை நீங்கள் வைத்திருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். பொதுவெளியில் இருக்கிறீர்கள். அப்போது உங்களுக்கு அருகில் ஒருவர் மொபைலில் அல்லது லேப்டாப்பில் பாஸ்வேர்டை தட்டச்சு செய்கிறார் எனில், அப்போது எழும் கீ போர்ட் சத்தத்தை வைத்து அது என்ன பாஸ்வேர்டு என்பதை செயற்கை நுண்ணறிவு கண்டுபிடித்துவிடும். இப்போது ஆன்லைனில் வேலை செய்வோர் அதிகம் இருப்பதால் அவர்கள் ஜூம் அல்லது ஸ்கைப் அழைப்புகளில் பங்கேற்கின்றனர். அப்போது பாஸ்வேர்டு ஒருவர் தட்டச்சு செய்தால் அதனை இன்னொருவர் கண்டுபிடித்துவிடலாம்.
ஹேக் எப்படி வேலை செய்கிறது?
கார்னெல் பல்கலைக்கழகத்தில் உள்ள குழு, பட்டன் அழுத்தங்களின் செவிவழி வடிவங்களைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு மாதிரியைப் பயிற்றுவித்தது. பயிற்சி பெற்றவுடன், AI மாதிரியானது ஒரு அல்காரிதத்தை உருவாக்கியது. அது ஒவ்வொரு முறையும் நீங்கள் கீ போர்டை மாற்றும்போது வேலை செய்யும். இதன் காரணமாக, நீங்கள் எந்த வகையான விசைப்பலகையைப் பயன்படுத்தினாலும் அல்லது எவ்வளவு அடிக்கடி உங்கள் கடவுச்சொல்லை மாற்றினாலும், AI போட் உங்கள் கடவுச்சொல்லாக நீங்கள் சரியாக என்ன அமைத்துள்ளீர்கள் என்பதைக் கண்டுபிடிக்கும். இதனை ஆய்வாளர் முயற்சி செய்து பார்த்துள்ளனர். அவர்கள் ஆராய்ச்சயில் தங்கள் மாற்றியமைக்கப்பட்ட AI போட்டை மைக்ரோஃபோன் பொருத்தப்பட்ட அருகிலுள்ள மொபைல் சாதனத்தில் பயன்படுத்தினார்கள். மேக்புக் ப்ரோவில் கீஸ்ட்ரோக்குகளால் உருவாக்கப்பட்ட ஒலிகளைக் கேட்கவும் திறமையாக அவற்றைப் பிரதிபலிக்கவும் இதனால் முடிந்தது.
எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?
இந்த மாதிரியான தீங்கிழைக்கும் ஏஐ பொருத்தப்பட்ட சாதனம் இருந்தால் உங்களுக்கு அது ஆபத்தாக வாய்ப்பு இருக்கிறது. பொது இடத்தில் நீங்கள் பாஸ்வேர்டு தட்டச்சு செய்யும்போது அதில் இருந்து எழும் ஒலி ஹேக்கிங் செயற்கை நுண்ணறிவால் கண்டுபிடித்துவிட முடியும். அதனால், இதற்கு பாதுகாப்பான அம்சம் என்னவென்றால் பயோமெட்ரிக் தான். மேலும், விண்டோஸ் ஹலோ, டச் ஐடி ஆகியவற்றை பயன்படுத்தலாம். இவை பாஸ்வேர்டு தட்டச்சு செய்யும் வழிமுறையை முற்றிலுமாக தவிர்க்கிறது.
மேலும் படிக்க | UPI பணப்பரிவர்த்தனைக்கு வரி...? - பேடிஎம் கொடுத்த முக்கிய அப்டேட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ