Airtel Black: ஏர்டெலின் இந்த ரீச்சார்ஜில் கிடைக்கும் பல நன்மைகள்
ஏர்டெல் பிளாக் என்கிற புதிய சேவை கீழ் மொத்தம் 4 பிளான்கள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்.
புது தில்லி. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளில் காலப்போக்கில் தங்களை நிறைய மாற்றிக்கொண்டன. இன்று சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தின் யுகத்தில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள், ஆன்லைன் ஷாப்பிங், சமூக ஊடகங்கள், இவை அனைத்தும் தொலைதொடர்பு நிறுவனங்களால் மட்டுமே அனுபவிக்கப்படுகின்றன.
அதன்படி இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் ஆபரேட்டர் ஆன ஏர்டெல் (Airtel) தனது சந்தாதாரர்களுக்காக ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெல் பிளாக் (Airtel Black) திட்டம் என்று பெயரிடப்பட்ட இந்த சேவை போஸ்ட்பெய்ட், DTH மற்றும் ஃபைபர் இணைப்பை ஆகியவைகளை ஒன்றாக ஒரே பில்லின் கீழ் வழங்கும்.
ALSO READ: Jio அட்டகாச ரீசார்ஜ் பிளான்கள்: ரூ.98-ல் 21GB தரவு, வரம்பற்ற அழைப்பு, இன்னும் பல நன்மைகள்
ஏர்டெல் அதன் பிளாக் திட்டத்திற்கான மைக்ரோசைட்டையும் உருவாக்கியுள்ளது. மேலும் இந்த சேவையின் கீழ் அணுக கிடைக்கும் புதிய திட்டம் ஒன் ஏர்டெல் திட்டத்தின் அதே நன்மைகளை வழங்குகிறது. புதிய ஏர்டெல் பிளாக் திட்டத்தின் கீழ், ஒரு ஏர்டெல் வாடிக்கையாளர் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஏர்டெல் சேவைகளை ஒன்றாக இணைத்து ஏர்டெல் பிளாக் ஆக பெற முடியும்.
ஏர்டெல் பிளாக் தனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப தங்கள் சொந்த திட்டத்தை உருவாக்கும் வசதியையும் வழங்குகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் விரும்பினால் தங்கள் ஏர்டெல் சேவைகளையும் அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சேவைகளையும் ஒரே கட்டணத்தில் இணைக்கலாம். தற்போது, ஏர்டெல் பிளாக் திட்டங்கள் ரூ .998 தொடங்கி ரூ. 2,099 வரை கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு திட்டத்திலும் போஸ்ட்பெய்ட் சேவை, டிடிஎச் திட்டம் மற்றும் ஃபைபர் + லேண்ட்லைன் திட்டம் ஆகியவை அடங்கும்.
இந்த திட்டத்தில் சேர, நீங்கள் ஏர்டெல் பிளாக் வலைத்தளம், Thanks App அல்லது அருகில் உள்ள ஏர்டெல் ஸ்டோரைப் பார்வையிடலாம்.
ALSO READ: உங்களிடம் Airtel சிம் உள்ளதா? இப்படி செய்தால், ரூ.4 லட்சம் மதிப்பிலான நன்மைகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR