Airtel Recharge: ஏர்டெல் 5ஜி நெட்வொர்க்கானது 3,000க்கும் மேற்பட்ட இந்திய நகரங்களில் கிடைக்கிறது, ஏர்டெல் 5ஜி பிளஸ் என அழைக்கப்படும் ஐந்தாவது தலைமுறை நெட்வொர்க் இணைப்பு கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.  நாடு முழுவதும் 5ஜி இணைப்பைச் செயல்படுத்துவதில் ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நெட்வொர்க் தான் முன்னணியில் உள்ளது.  ஜம்முவில் உள்ள கத்ரா முதல் கேரளாவின் கண்ணூர் வரையிலும், பீகாரில் உள்ள பாட்னா முதல் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி வரையிலும், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இட்டாநகர் யூனியன் பிரதேசமான டாமன் மற்றும் டையூ வரையிலும், நாட்டின் அனைத்து முக்கிய நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளிலும் உள்ள ஏர்டெல் பயனர்களுக்கு ஏர்டெல் 5ஜி ப்ளஸ் கிடைக்கிறது.  5ஜி ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போனை வைத்திருப்பவர்கள் புதிய நெட்வொர்க்குடன் இணைக்கலாம், ஏர்டெல் அதன் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 5ஜியை வழங்குகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஜாக்கிரதை! உங்கள் மொபைலில் உள்ள இந்த 11 ஆப்ஸ்களை உடனே நீக்குங்கள்!



இலவச அன்லிமிடெட் 5ஜி நெட்வொர்க்கை அனுபவிக்க வேண்டுமானால் பயனர்கள் ரூ.249 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டத்திற்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.  அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையைப் பெற ஏர்டெல் தேங்ஸ் செயலியைப் பார்க்க வேண்டும்.  அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆஃபரைப் பெறுவதற்கு முன், உங்களிடம் ரூ.239 அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் திட்டம் செயல்பாட்டில் உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும்.  உங்கள் ஸ்மார்ட்போனில் ஏர்டெல் தேங்ஸ் செயலியைத் திறக்க வேண்டும்.  உங்களிடம் அந்த ஆப்ஸ் இல்லையென்றால், கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து டவுன்லோடு செய்ய வேண்டும்.  திரையின் முகப்பு பக்கத்தில், "உங்கள் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை க்ளெய்ம் செய்யுங்கள்" என்று ஒரு பேனர் காட்டப்படும்.  சலுகையின் விவரங்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைக் காட்டும் பக்கத்திற்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள்.  


இந்த செயல்முறை முடிந்ததும், உங்கள் 'அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆஃபரை வெற்றிகரமாகப் பெற்றுள்ளீர்கள்' என்கிற செய்தி காட்டப்படும்.  உங்கள் ரீசார்ஜ் செல்லுபடியாகும் காலத்திற்கு உங்கள் ஏர்டெல் ப்ரீபெய்ட் எண்ணில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெற முடியும்.  கூடுதலாக, இந்த ஆஃபர் தனிப்பட்ட மற்றும் வணிகம் அல்லாத பயன்பாட்டிற்காக மட்டுமே உள்ளது மற்றும் மொபைல் ஹாட்ஸ்பாட்கள் வழியாக டேட்டாக்களை பகிரப்படுவதை அனுமதிக்காது.  எனவே நீங்கள் 5ஜி டேட்டாவைப் பெற்றிருந்தால் உங்கள் தனிப்பட்ட மொபைல் ஹாட்ஸ்பாட் மூலம் அதே வேகத்தை உங்களால் பகிர முடியாது.  அன்லிமிடெட் 5ஜி டேட்டா ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு ஆகிய இரண்டிற்கும் அந்தந்த திட்டங்களில் இருக்கும் டேட்டா ஒதுக்கீட்டை விட அதிகமாக உள்ளது.  இது ரீசார்ஜ் செல்லுபடியாகும் காலம் அல்லது பில்லிங் காலம் வரை சலுகை செல்லுபடியாகும்.  ஏர்டெல் 5ஜி சேவைகளை 3500 நகரங்களில் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், மார்ச் 2024-க்குள் சுமார் 7000 நகரங்கள் மற்றும் கிட்டத்தட்ட 100,000 கிராமங்களில் விரிவுபடுத்துவதாகவும் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | வாட்ஸ்அப் வழியாக அரங்கேறும் புதுவகை மோசடி; தப்பிப்பது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ