ஏர்டெல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு விலை குறைவான அதாவது வெறும் ரூ.99 விலையில் வழங்கி வந்த ரீசார்ஜ் திட்டத்தினை நிறுத்திவிட்டது.  அதற்கு பதிலாக சற்று விலை கூடுதலாக அதாவது ரூ.155 விலையில் சுமார் 19 மாநிலங்களில் இந்த ரீசார்ஜ் திட்டத்தை வழங்கி வருகிறது.  2023ம் ஆண்டின் தொடக்கத்தில் ஏர்டெல் ரீசார்ஜ் திட்டத்தின் விலையை உயர்த்தியதை தொடர்ந்து, இந்த ஆண்டின் மத்தியில் இன்னும் சில திட்டங்கள செயல்படுத்த முடிவெடுத்துள்ளது.  ரூ.99 திட்டத்திற்கு பதிலாக ரூ.155 திட்டத்தை ஏர்டெல் அறிமுகப்படுத்திய பிறகு, நிறுவனத்தின் வருமானம் 57 சதவீதம் அதிகரித்துள்ளது.  ஏர்டெல் ஒரு பயனருக்கான சராசரி வருவாயை (ARPU) ரூ. 300 ஆக அதிகரிக்க விரும்புகிறது மற்றும் ஜியோ நிறுவனத்துக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் தனது திட்டங்களில் அதிரடி மாற்றங்களை கொண்டு வருகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | IPL 2023 Free Live Streaming: ஏர்டெல் பயனர்களுக்கு அடிச்சது ஜாக்பட், ஒரே பிளானில் பல நன்மைகள்



ஏர்டெல் பல முதலீடுகளை செய்திருப்பதால் அதன் நிதி நிலையில் எவ்வித சரிவும் இல்லை, இருப்பினும் வருமானம் அவ்வளவு சிறப்பாக இல்லை.  இதன் காரணமாக தான் ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம் 2023-ம் ஆண்டின் மத்தியில் அதன் கட்டணங்களில் சில திருத்தங்களை மேற்கொள்ளவிருக்கிறது.  ஏர்டெல் தலைவர் சுனில் பார்தி மிட்டல், ரீசார்ஜ் திட்டத்தின் கட்டணங்கள் மிகவும் குறைவாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் மற்றும் நிறுவனம் கட்டணங்களை உயர்த்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் கூறுகிறார். ஏர்டெல் நிறுவனம் தற்போது செயல்படுத்தி வரும் ரூ.155 திட்டமானது தினசரி 1ஜிபி டேட்டா, தினசரி 300 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளை வழங்குகிறது.  ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம் 19 வட்டங்களில் குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ஆனால் மத்தியப் பிரதேசம், கொல்கத்தா மற்றும் குஜராத்தில் இன்னும் மாற்றங்களைச் செய்யவில்லை.  ஏர்டெல் நிறுவனம் 2021 டிசம்பரில் ரூ.163 ஆக இருந்த ARPUஐ கடந்த ஆண்டு டிசம்பரில் ரூ.193 ஆக உயர்த்தியது.


ஹெச்எஸ்பிசி வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், ஏர்டெல் போஸ்ட்பெய்ட் பயனர்களின் எண்ணிக்கையையும், 5ஜி நெட்வொர்க் வளர்ச்சியையும் தூண்டும் என்றும் தெரிவித்துள்ளது.  ஏர்டெல் நிறுவனம் இதுவரை 151 நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது மற்றும் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 300 நகரங்களில் சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.  2ஜியில் இருந்து 4ஜிக்கு வாடிக்கையாளர்கள் மாறுவதால் மொபைல் வருவாயிலும் சிறப்பான லாபம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி! BSNL இந்த 4 ரீசார்ஜ் பேக்குகளை அதிரடியாக நீக்கியுள்ளது!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ