ஏர்டெல்லின் அட்டகாசமான ஆஃபர்! ரூ.209க்கு ரீச்சார்ஜ் செய்து அமேசான் பிரைம் பெறுங்கள்
ஏர்டெல் நிறுவனத்தின் குறைந்த விலையில் இருக்கும் ரீச்சார்ஜ் திட்டத்தில் அமேசான் பிரைம் சந்தா கிடைக்கும் திட்டங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடும் போட்டியை அளிக்கிறது. மற்ற நிறுவனங்களுக்கு சவால் கொடுக்கும் வகையில் அவ்வப்போது குறைந்த விலையில் அசத்தலான ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களையும் அறிவித்து வருகிறது. அந்தவகையில் மிக குறைந்த விலையில் அமேசான் பிரைம் சந்தா வழங்கும் திட்டங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
ரூ. 209 திட்டம் சிறப்பம்சம்
21 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீப்பெய்ட் திட்டம் 209 ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா வசதி உள்ளது. மேலும், இந்தத் திட்டத்தில், எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிட்டெட் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களை அனுப்பிக் கொள்ள முடியும். இவைதவிர அமேசான் பிரைம் வீடியோவின் மொபைலுக்கான இலவச சந்தா மற்றும் விங்க் மியூசிக் அம்சங்களை கூடுதலாக பெறுவீர்கள்.
மேலும் படிக்க | Airtel பயனர்களுக்கு சூப்பர் நியூஸ்: கரண்ட் பில் குறையும், பல சலுகைகளும் கிடைக்கும்
கூடுதல் திட்டங்கள்
1 ஜிபி டேட்டாவில் மேலும் இரண்டு திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் வழங்குகிறது. 239 ரூபாய் விலையில் உள்ள ப்ரீப்பெய்ட் ரீச்சார்ஜ் திட்டம் 24 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. 265 ரூபாய் விலையில் உள்ள ப்ரீப்பெய்ட் திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. அன்லிமிட்டெட் அழைப்பு மற்றும் நாள் ஒன்றுக்கு தலா 100 எஸ்எம்எஸ்களை அனுப்பிக் கொள்ள முடியும்.
1.5 டேட்டா திட்டம்
299 ரூபாய் திட்டத்தை ரீச்சார்ஜ் செய்தால் நாள் ஒன்றுக்கு 1.5 டேட்டாவை நீங்கள் பெற முடியும். 28 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிட்டெட் அழைப்புகள், நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அமேசான் பிரைம் சந்தாவையும் பெறுவீரகள். விங்க் மியூசிக் அணுகலையும் ஏர்டெல் இந்த ரீச்சார்ஜ் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறது. இதே அம்சங்களுடன் 56 நாட்களுக்கு ரீச்சார்ஜ் செய்து கொள்ள முடியும். அதற்கு நீங்கள் 479 ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்ய வேண்டும். 77 நாட்களுக்கு வேண்டும் என்றால் 666 ரூபாய்க்கும், 84 நாட்களுக்கு வேண்டும் என்றால் 799 ரூபாய்க்கும் ரீச்சார்ஜ் செய்து அமேசான் ஓடிடி சந்தாவை அனுபவியுங்கள்.
மேலும் படிக்க | ஏர்டெல் வழங்கும் கிரெடிட் கார்ட் ஆபர்கள்! பயன்படுத்துவது எப்படி?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR