Whatsapp: சமீப காலமாகவே வாட்ஸ்அப் போன்ற மெசேஜிங் செயலிகளில் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகள் வருவது அதிகரித்துள்ளது, அதிலும் குறிப்பாக வாட்ஸ் அப் செயலியில் அதிகளவு இதுபோன்ற பிரச்சனை ஏற்படுகிறது.  நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் இந்த மோசடி வலையில் விழுந்து வேதனையில் இருந்து வருகின்றனர், பல லட்சக்கணக்கிலான தொகையை மக்கள் இழந்துள்ளனர்.  சமீபத்தில் சண்டிகரில் ஒரு நபர் தனது வாட்ஸ் அப் எண்ணில் பெறப்பட்ட தெரியாத இணைப்பைக் கிளிக் செய்து பல லட்சம் ரூபாயை இழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அந்த நபர் மோசடிக்காரர்களிடம் சுமார் ரூ.17 லட்சத்தை இழந்திருக்கிறார்.  வாட்ஸ் அப் மூலம் நடைபெறும் மோசடியில் சிக்காமல் உங்களை பாதுகாத்து கொள்ள சில முக்கியமான வழிகளை பற்றி இங்கே பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | Best Affordable Cars: ரூ. 5 லட்சத்தை விட குறைவான விலையில் கிடைக்கும் டாப் கார்கள்


1) டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் அம்சத்தைப் பயன்படுத்தி உங்கள் வாட்ஸ்அப் கணக்கின் பாதுகாப்பை மேம்படுத்தலாம்.  இந்த அம்சம் ஃபிஷிங் தாக்குதல்கள் மூலம் உங்கள் கணக்கைக் கைப்பற்ற முயற்சிக்கும் மோசடி கும்பலுக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பை வழங்கும்.  இந்த அம்சத்தை ஆக்டிவேட் செய்வதன் மூலம் உங்கள் கணக்கை மீட்டமைக்கும்போது அல்லது சரிபார்க்கும்போது ஆறு இலக்க பின்னை உள்ளிடுமாறு இந்த அம்சம் கேட்கும்.


2) உங்கள் வாட்ஸ் அப் எண்ணுடன் இணைக்கப்பட்ட சாதனங்களின் பட்டியலை எப்போதும் கண்காணிக்க வேண்டும்.  அடையாளம் தெரியாத சாதனத்தில உங்கள் வாட்ஸ் அப் கணக்கு இருப்பது தெரிந்தால் நீங்கள் உடனடியாக வெளியேற வேண்டும்.  வாட்ஸ்அப் வெப்/டெஸ்க்டாப் மூலம் உங்கள் கணக்கை யாராவது அணுகுவதாக நீங்கள் சந்தேகப்பட்டால், உங்கள் மொபைலைப் பயன்படுத்தும் எல்லா கணினிகளிலிருந்தும் நீங்கள் வெளியேற வேண்டும்.


3) போலி ஃபிஷிங் இணைப்புகளைப் பயன்படுத்தி மோசடி செய்பவர்களிடம் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.  வாட்ஸ் அப்பில் சந்தேகத்திற்கிடமான செய்தி அல்லது கோரிக்கையைப் பெற்றால் அதற்கு  பதிலளிப்பதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை நன்கு யோசியுங்கள்.  சரிபார்க்கப்படாத இணைப்பைக் கிளிக் செய்வதைத் தவிர்த்திடுங்கள், இவ்வாறு செய்வதன் மூலம் இந்த போலி இணைப்புகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.


4) வாட்ஸ்அப்பில் பிறருக்கு உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வதை நீங்கள் தவிர்ப்பது மோசடிகளில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்கான சிறந்த வழியாகும்.  மேலும் உங்கள் கணக்கை மோசடி செய்பவர்களிடமிருந்து பாதுகாப்பாக வைத்திருக்கலாம்.


5) உங்களுக்கு தெரியாத நபரிடம் இருந்து செய்தி வந்தால் நேரடியாக நிறுவனத்தை அல்லது அந்த தனிநபரை தொடர்பு கொள்ளவும்.  தனிப்பட்ட தகவல்களைப் பகிரவோ அல்லது பணம் அனுப்பவோ வேண்டாம், மோசடிகளைத் தடுக்க வாட்ஸ்அப்பில் தடுப்பு மற்றும் புகாரளிக்கும் அம்சத்தைப் பயன்படுத்தவும்.  தெரியாத தொலைபேசி எண்களுக்கு பதிலளிப்பதை தவிர்த்து, சந்தேகத்திற்குரிய கணக்குகளை பிளாக் செய்து புகாரளிக்க வேண்டும்.


6) வாட்ஸ் அப்பின் பிரைவசி செட்டிங் மற்றும் க்ரூப் இன்வைட் சிஸ்டம் மூலம் உங்களை வாட்ஸ் அப் குழுக்களில் யார் சேர்க்கலாம் என்பதை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.  சந்தேகத்திற்கிடமான வாட்ஸ் அப் குழுவில் நீங்கள் இருப்பதை கண்டால் அந்தக் குழுவிலிருந்து உடனே வெளியேறி விடுங்கள்.


மேலும் படிக்க | PhonePe, Paytm மூலம் தவறான நபருக்கு பணம் அனுப்பினால் திரும்பப் பெறுவது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ