உங்கள் மைக்ரோஃபோனை WhatsApp அணுகுகிறதா? அதிர்ச்சி தகவல்

வாட்ஸ்அப் நிறுவனம் பயனாளர்களின் மைக்ரோஃபோனை அணுகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தகவல்கள் கசியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

1 /6

WhatsApp மீது ஒரு பெரிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது என்னவென்றால், WhatsApp யூசர்களின் தொலைபேசியின் மைக்ரோஃபோனை அணுகுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. பொறியாளர் ஒருவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.   

2 /6

அப்போதிருந்து, உலகின் கவனம் இந்த விஷயத்தில் திரும்பியது. குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர் அது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்டையும் பகிர்ந்துள்ளார். பொறியாளர் தவிர, பல பயனர்களும் இது குறித்து வாட்ஸ்அப் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளனர்.  

3 /6

உங்கள் மைக்ரோஃபோனை WhatsApp அணுகுவதாக நீங்கள் சந்தேகித்தால், உடனடியாக அதைச் சரிபார்க்கவும். இதற்கு ஒரு சுலபமான முறை இங்கே சொல்லப்படுகிறது, இதைப் பயன்படுத்தி நீங்கள் உண்மை என்னவென்று தெரிந்துகொள்ளலாம்.  

4 /6

முதலில் உங்கள் போனுக்குச் சென்று வாட்ஸ்அப் அமைப்பைத் திறக்க வேண்டும். அமைப்பைத் திறந்த பிறகு, WhatsApp தனியுரிமைக்குச் செல்ல கிளிக் செய்யவும். தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்புக்குச் சென்ற பிறகு, மைக்ரோஃபோனைப் பயன்படுத்தும் எல்லா பயன்பாடுகளின் காலவரிசையையும் பார்க்க வேண்டும்.  

5 /6

உங்கள் வாட்ஸ்அப் மைக்ரோஃபோனைப் பயன்படுத்துகிறதா இல்லையா என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.  

6 /6

நீங்கள் ஆண்ட்ராய்டு-12 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்பைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், இந்த வகையான சிக்கலை நீங்கள் பார்க்கலாம். புகாரைப் பெற்ற வாட்ஸ்அப் அதற்கு பதிலளித்துள்ளது. பிழை காரணமாக இது நடந்திருக்க வேண்டும் என்று WhatsApp விளக்கமளித்துள்ளது.