NASA வெளியிட்டுள்ள செவ்வாய் கிரக படத்தில் காணப்படும் வேற்று கிரக போர்வீரர்…!!!
நாசாவின் (NASA) மார்ஸ் ரோவர் க்யூரியாஸிட்டி (Mars rover Curiosity) செவ்வாய் கிரகத்தின் சில படங்களை வெளியிட்டுள்ளது. அதில் வேற்று கிரகவாசி (Alien) இருப்பதை காண முடிகிறது.
புது தில்லி: நாசாவின் (NASA) மார்ஸ் ரோவர் க்யூரியாஸிட்டி (Mars rover Curiosity) செவ்வாய் கிரகத்தின் சில படங்களை வெளியிட்டுள்ளது. அதில் வேற்று கிரகவாசி (Alien) இருப்பதை காண முடிகிறது.
UFO நிபுணர் என தன்னை தானே கூறிக் கொள்ளும் திரு. Scott C. Waring, சமீபத்தில் நாசா வெளியிட்டுள்ள செவ்வாய் கிரகத்தின் படங்களின் உதவியுடன், ஒரு வியக்கத்தக்க விஷயத்தை கண்டறிந்துள்ளார். அதில் செவ்வாய் கிரகத்தில் உள்ள மலை போன்ற பகுதிகளில், ஒரு போர் வீரரை போற உருவம் தெரிவதாகக் கூறியுள்ளார். ஸ்பூட்னிக் செய்தி நிறுவனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
வாரிங் தனது ET Database என்னும் ப்ளாகில், நாசாவின் (NASA) ரோவர் எடுத்துள்ள படங்களில் செவ்வாய் கிரகத்தில் மலை பகுதியில் ஒரு உருவம் தெரிவதாக குறிப்பிட்டுள்ளார். அந்த உருவத்தில் எதிர்களின் மனதில் பயத்தை ஏற்படுத்தும் வகையிலான வலிமை காணப்படுவதாகவும் அதில் அவர் எழுதியுள்ளார்.
மனிதர்களுடன் ஒப்பிடும் போது, சில ஏலியன்கள், உயரமானவர்களாக இருக்கின்றனர். அவர்கள் கபாலத்தின் அளவும் பெரிதாக இருக்கிறது எனக் கூறியுள்ளார்.
இதை பார்க்கும் போது தனக்கு மவுண்ட் ரஷ்மோர் (Mount Rushmore) நினைவு வருவதாக குறிப்பிட்டுள்ளார். மவுண்ட் ரஷ்மோர் என்பது ஒரு கிராணைட் மலை பிரதேசம் ஆகும். இங்குள்ள தேசிய நினைவிடத்தில், அமெரிக்க அதிபர்களின் தலைகள் இந்த கிராணைட் மலைகளில் செதுக்கப்பட்டிருக்கும். அதில் சியார்ச் வாசிங்டன், தாமஸ் ஜெஃவ்வர்சன், தியொடோர் ரோசவெல்ட், மற்றும் ஆபிரகாம் லிங்கன் ஆகியோரின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மிகவும் பிரம்மாண்டமாக தோன்றும் இந்த தேசிய நினைவிடம் லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read | கடும் வெப்பத்தை தணிக்க வந்துவிட்டது பருவ மழை... எத்தனை நாட்களுக்கு நீடிக்கும்?
ஸ்பூட்னிக் செய்தி நிறுவனம் தனது YouTube சேனலில், வாரிங்கின் இந்த கண்டுபிடிப்பை பற்றி குறிப்பிட்டுள்ளது. வீடியோவில், மூல படத்தையும், அதில் உருவம் தென்படும் இடத்தை வண்ணமிட்டு காட்டும் படத்தையும் வெளியிட்டுள்ளது.
தைவானில் உள்ள இந்த UFO நிபுணர் வாரிங், ஏலியன்கள் (Alien) ஆராய்ச்சியில், நாசாவின் படங்கள் மற்றும் கூகிள் மேப்களை ஆய்வு செய்வதில் ஈடுபடுவர் ஆவார்.
மொழியாக்கம்: வித்யா கோபாலகிருஷ்ணன்