புது தில்லி: அமேசான், பயனர்களின் பெரும்பாலான ஆதரவைப் பெற்ற ஒரு ஆன்லைன் ஷாப்பிங் தளமாகும். இது மக்களால் மிகவும் விரும்பப்படுகிறது. அனைத்து வகையான பொருட்களும் இங்கு கிடைக்கின்றன. மேலும், மக்கள் பொருட்களை இங்கிருந்து மலிவு விலையில் வாங்க முடிகிறது. புதிய சலுகைகள் மற்றும் டீல்களை வழங்கி அமேசான் தனது வாடிக்கையாளர்களை மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமேசான் (Amazon) தற்போது மற்றொரு அற்புதமான சலுகையைக் கொண்டு வந்துள்ளது. இந்த சலுகை என்ன, அதிலிருந்து நீங்கள் எவ்வாறு பயனடையலாம் என்று இந்த பதிவில் காணலாம்.


55 இன்ச் டிவியில் பெரும் தள்ளுபடி


அமேசான் அனைத்து வகையான தயாரிப்புகளிலும் சலுகைகளைக் (Amazon Offer) கொண்டு வந்தாலும், தற்போது பெரிதாக பேசப்படும் சலுகை டிவி சலுகையாகும். இந்த ஆண்டு தொடங்கப்பட்ட iFFALCON 55-inch 4K Ultra HD TV 55K71 தற்போது அமேசானில் கிடைக்கிறது. மேலும் இதில் 65% வரை தள்ளுபடியும் பெற முடியும்.


ரூ .1,06,990 விலை கொண்ட இந்த டிவியை நீங்கள் வெறும் ரூ .36,990 க்கு வாங்கலாம். இந்த சமீபத்திய iFFALCON டிவியில் அமேசான் உங்களுக்கு ரூ .70,000 -க்கான முழு தள்ளுபடியை வழங்குகிறது.


ALSO READ: Google, Amazon, Facebook-க்கு அதிர்ச்சி: புதிய கட்டண தளத்துக்கு தடை விதித்தது RBI


மேலும், நீங்கள் HSBC கேஷ்பேக் கார்டைப் பயன்படுத்தினால், கூடுதலாக 5% உடனடி தள்ளுபடியும் கிடைக்கும். எக்ஸ்சேஞ்ச் சலுகையும் இதில் உள்ளது. இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகை மூலம் ரூ .6,420 வரையிலான அதிக பலனை நீங்கள் பெறலாம். ஆக மொத்தத்தில் இந்த டிவியை வாங்கும்போது ரூ .78,270 வரை தள்ளுபடி பெறும் வாய்ப்புகள் உள்ளன.


இந்த தொலைக்காட்சியின் சிறப்பம்சம் என்ன


இந்த 55 அங்குல ஸ்மார்ட் டிவி (Smart TV) 3840 x 2160 பிக்சல் ரெசல்யூஷன், எச்டிஆர் 10-க்கான சப்போர்ட், 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் ஏ+ கிரேடு பேனல் மற்றும் டிம் லைட்டிங் சப்போர்டுடன் வருகிறது. 30W சவுண்ட் அவுட்புட் கொண்ட டால்பி ஸ்பீக்கர்கள், 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட டால்பி ஸ்பீக்கர்கள் ஆகியவை இதில் உள்ள சிறப்பம்சங்கள் ஆகும்.


இணைப்பு வசதிக்கு இதில், ஆண்ட்ராய்டு 9 மூலம் இயங்கும் டிவி ப்ளூடூத், மூன்று HDMI போர்ட்கள் மற்றும் 2 USB போர்ட்களை கொண்டுள்ளது. இதில் ஹேண்ட்ஸ் ஃப்ரீ வாய்ஸ் கண்ட்ரோல் உள்ளது. மேலும் இது, நெட்ஃபிளிக்ஸ், அமேசான் ப்ரைம் மற்றும் யூடியூப் போன்ற தளங்களையும் சப்போர்ட் செய்கிறது.


ALSO READ: SALE: OnePlus முதல் Samsung வரை அசத்தல் Offers, Amazon இல் சிறப்பு தள்ளுபடி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR