Amazon Prime உறுப்பினர்களுக்கு வெறும் ரூ.2-ல் கிடைக்கும் இந்த சேவைக்கான மெம்பர்ஷிப்

தற்போது வெறும் 2 ரூபாயில் நான்கு மாதங்களுக்கான ஆடிபில் சந்தாவை அமேசான் நிறுவனம் தருகிறது. இந்த சலுகை Amazon Prime Day 2021 டீலின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 17, 2021, 02:41 PM IST
Amazon Prime உறுப்பினர்களுக்கு வெறும் ரூ.2-ல் கிடைக்கும் இந்த சேவைக்கான மெம்பர்ஷிப் title=

புதுடெல்லி: அசத்துகிறது அமேசான்!! தற்போது வெறும் 2 ரூபாயில் நான்கு மாதங்களுக்கான ஆடிபில் சந்தாவை (Audible Subscription) அமேசான் நிறுவனம் தருகிறது. இந்த சலுகை Amazon Prime Day 2021 டீலின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டீல் ஜூலை 12 முதல் ஆகஸ்ட் 10 வரை செல்லுபடியாகும். ஆடிபில் சந்தா சலுகை ப்ரைம் உறுப்பினர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை 26 மற்றும் ஜூலை 27 ஆம் தேதிகளுக்கு அறிவிக்கப்பட்ட ப்ரைம் டே சேலுக்கு (Prime Day Sale) முன்னால் இது உள்ளது.

ஆடிபில் சந்தாவைப் பெறும் வாடிக்கையாளர் ஒவ்வொரு மாதமும் ஒரு ஆடியோபுக் டைட்டிலைப் பெற முடியும். இது எவ்வளவு பெரிய ஆடியோ புக்காக இருந்தாலும், இதன் தொகை என்னவாக இருந்தாலும், இந்த வசதி வழங்கப்படும். அமேசான் (Amazon) தனது இணையதளத்தில் இந்த தகவலை வழங்கியுள்ளது. இந்த செயலியைப் பற்றி அறியாதவர்கள், ஆடியோ ஆப், பயனர்களுக்கு ஆடியோபுக்குகள் மற்றும் பாட்காஸ்ட்களை வழங்குகிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். வெவ்வேறு ஆடியோபுக்குகளின் விலைகள் வெவ்வேறாக இருக்கும்.

சந்தாவில் இவை எல்லாம் இருக்கும்

சந்தாவுடன், பயனர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு ஆடியோபுக்கை இலவசமாகக் கேட்க முடியும்.  அமேசான் ஒவ்வொரு மாதமும் ஒரு யூனிட்டை ஒரு வாடிக்கையாளர் கணக்கில் டெபாசிட் செய்கிறது. இதனால் அவர்கள் எந்த ஆடியோபுக்கையும் இலவசமாக வாங்க முடியும். அமேசான் ப்ரைம் உறுப்பினர்கள் (Amazon Prime Members) ஏற்கனவே 90 நாட்களுக்கான இலவச ஆடிபிள் மெம்பர்ஷிப்பை பெற்றுள்ளார்கள். எனவே புதிய உறுப்பினர்களுக்கு ஒரு மாதம் மட்டுமே கூடுதல் பயன் கிடைக்கும்.

ALSO READ: Amazon App quiz: அமேசானில் 10 ஆயிரம் ரூபாய் வெல்ல அரிய வாய்ப்பு

இந்த முறையில் சப்ஸ்கிரிப்ஷன் பெறலாம்

- அமேசான் வலைத்தளத்தில் மெம்பர்ஷிப்புக்கு சைன் அப் செய்யவும். 

- டீலுக்கான பட்டனைக் தேர்ந்தெடுக்கவும்.

- இதற்குப் பிறகு அமேசான் தளம் உங்களை கட்டணப் பக்கத்திற்கு அழைத்துச் செல்லும்.

- கட்டணம் செலுத்திய பிறகு, பயனர்கள் வலைத்தளம் மற்றும் செயலியின் மூலம் ஆடிபிள் தளத்தை அணுக முடியும்.

- நான்கு மாதங்களுக்குப் பிறகு, ஆடிபிள் யூசர்களின் மெம்பர்ஷிப்பு கட்டணம் செலுத்தும் மெம்பர்ஷிப்பாக மாறும். அவர்களிடம் மாதம் ரூ .199 வசூலிக்கப்படும். 

- ஒவ்வொரு மாதமும் ஒரு இலவச ஆடியோபுக் மட்டுமல்லாமல், ஆடிபிள் சந்தா, ஆடிபிள் ஒரிஜினல் நிகழ்ச்சியை வரம்பில்லாமல் கேட்பதற்கும் ஆஃப்லைனில் கேட்பதற்குமான வசதியும் கிடைக்கும். இது இகோ சாதனங்களில் ஆடியோ புக் மற்றும் பாட்காஸ்ட் கேட்பதற்கும் பயன்படும்.

ALSO READ: Amazon Offer: iPhone 12-ல் அட்டகாச தள்ளுபடி, தவற விட்டுடாதீங்க!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News