விளையாட்டு ஆர்வலர்கள் எப்போதும் சக்திவாய்ந்த பேட்டரி கொண்ட தொலைபேசியை நாடுகிறார்கள். சமீபத்தில் சில ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 5000mAh முதல் 6000mAh வரையிலான பேட்டரிகள் கொண்ட தொலைபேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளன. இவை நீண்ட நேர பேட்டரி பவரை அளிக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீங்களும் வலுவான பேட்டரியுடன் கூடிய தொலைபேசியை வாங்க விரும்பினால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. தென் கொரிய நிறுவனமான சாம்சங் தனது சமீபத்திய தொலைபேசியான Samsung Galaxy F22-வின் விலையை குறைத்துள்ளது. இதில் எவ்வளவு பணம் குறைக்கப்பட்டுள்ளது என்பதை இந்த பதிவில் காணலாம்.


சலுகை விவரங்கள் இதோ


சாம்சங்கின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, Samsung Galaxy F22-வில் ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கிறது. இந்த சலுகையைப் பெற நீங்கள் ICICI வங்கி (ICICI Bank) கார்ட் கொண்டு பணம் செலுத்த வேண்டும். இந்த சலுகைக்கு பிறகு, போனின் விலை ரூ .11,499 ஆகியுள்ளது.


ALSO READ:அசத்தல் பேட்டரி கொண்ட அட்டகாசமான Samsung Galaxy A22 அறிமுகம் ஆனது!!


Samsung Galaxy F22 விவரக்குறிப்புகள்


Samsung Galaxy F22 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் HD + சூப்பர் AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இது 700x1600 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்டது. தொலைபேசி ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான One UI 3.1-ல் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் (Smartphone) MediaTek Helio G80 செயலி பொருத்தப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டின் உதவியுடன் அதன் ஸ்டோரேஜை 1 TB ஆக அதிகரிக்கலாம்.


கேமரா விவரங்கள்


புகைப்படம் எடுப்பதற்கு, சாம்சங் கேலக்ஸி F22 இல் குவாட் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் முதன்மை கேமரா 48 மெகாபிக்சல்கள் கொண்டுள்ளது. இரண்டாம் நிலை கேமராவில் 8 மெகாபிக்சல்கள் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உடன் 2 மெகாபிக்சல் அல்ட்ராவைடு சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.


பேட்டரி மற்றும் இணைப்பு வசதி


வலுவான பேட்டரி உள்ளது. இது 25W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இணைப்பு வசதிக்காக, 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS மற்றும் USB, NFC போன்ற அம்சங்கள் போனில் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்காக, போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது.


ALSO READ:Flipkart Big Saving Days sale: இந்த ஸ்மார்ட்போன்களில் பம்பர் ஆப்பர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR