ICICI அதிரடி அறிவிப்பு; ஆகஸ்ட் 1 முதல் முக்கிய மாற்றங்கள்

ஆகஸ்ட் மாதம் முதல் பணப் பரிவர்த்தனைக் கட்டணங்களை உயர்த்துவதாக ஐசிஐசிஐ வங்கி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 6, 2021, 10:49 AM IST
  • ஐசிஐசிஐ வங்கியின் புதிய சேவை கட்டணங்கள் ஆகஸ்ட் 1 முதல் பொருந்தும்
  • ICICI Bank பண வைப்புக் கட்டணங்களை மாற்றுகிறது
  • ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் பரிமாற்றக் கட்டணத்தையும் திருத்தியது
ICICI அதிரடி அறிவிப்பு; ஆகஸ்ட் 1 முதல் முக்கிய மாற்றங்கள் title=

புது டெல்லி: ICICI Bank Alert: ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பு இது. அடுத்த மாதம் முதல் பரிவர்த்தனைக் கட்டணங்கள் மாறவிருக்கின்றன. இது தொடர்பான அறிவிப்பை ஐசிஐசிஐ வங்கி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் முழு விவரம் இங்கே காண்போம். 

என்னென்ன கட்டணங்கள் அதிகரிக்க போகின்றன
ஐசிஐசிஐ வங்கியின் (ICICI Bank) பண பரிவர்த்தனை, காசோலைக்கான கட்டண விகிதங்கள், ஏடிஎம் (ATM) கட்டணங்கள் என பலவும் மாறவுள்ளன. அதெல்லாம் சரி இந்த கட்டணங்கள் எவ்வளவு அதிகரிக்கப்பட்டுள்ளன.

ALSO READ | Home Loan: எந்த வங்கி குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் கொடுக்கிறது?

பண பரிவர்த்தனை கட்டணங்கள் என்று பார்க்கும்போது, மாதத்திற்கு முதல் 4 பரிவர்த்தனைகள் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 150 ரூபாய் கட்டணமாகும். மதிப்பு அடிப்படையில், வங்கிக் கணக்கு உள்ள கிளையில் பணப் பரிவர்த்தனை செய்தால் ஒரு மாதத்துக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரையில் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். அதைத் தாண்டும் போது 1000 ரூபாய்க்கு ரூ.5 என்ற அளவில் கட்டணம் செலுத்த வேண்டும்.

மூன்றாம் தரப்பு மூலமாக பரிவர்த்தனை செய்யும்போது நாள் ஒன்றுக்கு ரூ.25,000 மட்டுமே செய்ய அனுமதி. அதைத் தாண்டி அனுமதிக்கப்படாது. அதன்பாடி 25,000 ரூபாய்க்கு மேல் செய்யும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 1000 ரூபாய்க்கு 5 ரூபாய் கட்டணமாகும். (subject to a minimum of Rs 150) மூத்த குடிமக்களுக்கு நாள் இன்றுக்கு ரூ.25,000 என்ற வரம்பு இருக்கும். ஆனால் அதிக பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது.

டெல்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைத்ராபாத், மும்பை உள்ளிட்ட ஆறு நகரங்களில் முதல் 3 பரிவர்த்தனைகள் இலவசமாகும். இவை தவிர மற்ற பகுதிகளில் மாதத்திற்கு முதல் 5 பரிவர்த்தனைகள் இலவசமாகும். அதிகபட்ச பரிவர்த்தனைகளுக்கு ஒவ்வொரு நிதி ரீதியிலான பரிவர்த்தனைகளுக்கு 20 ரூபாய் கட்டணமாகும். நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு 8.50 ரூபாய் கட்டணமாகும்.

ஒரு வருடத்திற்கு 25 காசோலைகளுக்கு கட்டணம் கிடையாது. அதற்கு மேற்பட 10 காசோலைகள் கொண்ட ஒவ்வொரு புத்தகத்திற்கும் 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேற்கண்ட கட்டணத்துடன் ஜிஎஸ்டி கட்டணமும் இதில் அடங்கும்.

ALSO READ | ICICI புதிய சேவை தொடக்கம், இனி UPI மூலம் பணம் செலுத்தலாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News