Micromax IN 2b அறிமுகம் ஆனது: அசத்தலான பட்ஜெட் போனின் அம்சங்கள் இதோ

Micromax இந்தியாவில் புதிய In 2b ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது, இது மைக்ரோமேக்ஸ் இன் 1 பி சாதனத்தின் அடுத்த பதிப்பாகும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 30, 2021, 07:09 PM IST
Micromax IN 2b அறிமுகம் ஆனது: அசத்தலான பட்ஜெட் போனின் அம்சங்கள் இதோ title=

Micromax In 2b: Micromax இந்தியாவில் புதிய In 2b ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது, இது மைக்ரோமேக்ஸ் இன் 1 பி சாதனத்தின் அடுத்த பதிப்பாகும்.

இந்த புதிய பட்ஜெட் தொலைபேசியில் 6.52 இன்ச் எச்டி + டிஸ்ப்ளே, இரட்டை பின்புற கேமரா அமைப்பு, 5,000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் இன்னும் பல முக்கிய அம்சங்கள் உள்ளன. இந்த தொலைபேசியின் சிறப்பம்சம் என்னவென்றால், இதில் போன் 'ஹேங்' ஆகும் பிரச்சனையே வராது. Micromax In 2b-இன் விலை மற்றும் அம்சங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

மைக்ரோமேக்ஸ் 2 பி-யின் விலை 

புதிய மைக்ரோமேக்ஸ் இன் 2 பி இன்(Micromax In 2b) 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாறுபாட்டின் விலை ரூ .7,999 அகும். 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாறுபாட்டின் விலை 8,999 ரூபாய் ஆகும். இது கருப்பு, நீலம் மற்றும் பச்சை வண்ணங்களில் வருகிறது. போனின் விற்பனை பிளிப்கார்ட் மற்றும் Micromaxinfo.com-ல் இருக்கும்.

Micromax In 2b-ன் அம்சங்கள்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Micromax In 2b, 6.52 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளேவுடன் 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், 89 சதவிகிதம் ஸ்க்ரீன்-டு-பாடி விகிதம் மற்றும் 20: 9 ஆஸ்பெக்ட் விகிதத்துடன் வருகிறது. இது 'ஆண்ட்ராய்டு (Android) 11 அவுட் ஆஃப் தி பாக்ஸ்' உடன் வருகிறது. இந்த பட்ஜெட் போன் யுனிசாக் டி 610 ஆக்டா-கோர் செயலியைக் கொண்டுள்ளது. இது 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு ஆதரவைப் பெற்றுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டின் உதவியுடன் 256 ஜிபி வரை ஸ்டோரேஜை அதிகரிக்கும் வசதியையும் நிறுவனம் வழங்கியுள்ளது.

ALSO READ: Nokia T20 tablet: கம்மி விலைக்கு NOKIA Tablet விரைவில் அறிமுகம்

Micromax In 2b ஸ்மார்ட்போனில் (Smartphone) உள்ள 5,000 எம்ஏஎச் பேட்டரி, 160 மணிநேர மியூசிக் பிளேபேக், 20 மணிநேர வெப் பிரவுசிங், 15 மணி நேர வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் 50 மணி நேர டாக் டைம் ஆகியவற்றை வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது.

புகைப்படம் எடுப்பதற்கு, இந்த போனில் இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இதில் f/1.8 அபர்சர் கொண்ட 13MP பிரதான கேமரா மற்றும் 2MP இரண்டாம் நிலை சென்சார் உள்ளது. இது நைட் மோட், பேகிரவுண்ட்ட் போர்ட்ரைட், பியூட்டி மோட், மோஷன் ஃபோட்டோ, மற்றும் இதுபோன்ற இன்னும் பல அம்சங்கள் உள்ளன. முன்பக்கத்தில் 5 எம்பி செல்ஃபி கேமரா உள்ளது.

ALSO READ: Good News: 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்டைலாக திரும்பி வந்துள்ளது Nokia 6310!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News