புதுடில்லி: Google பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி. கூகிள் இப்போது உங்கள் உடல்நலம் குறித்த தகவல்களையும் உங்களுக்கு தெரிவிக்கும். கூகிளின் I / O 2021 நிகழ்வில் நிறுவனம் பல தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியது. ஆனால் கூகிள் அறிமுகப்படுத்தியுள்ள ஒரு சுகாதார கருவி அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன் வரும் நாட்களில் கூகிள் உடலின் தோல் தொடர்பான சில நோய்களை அடையாளம் காண முடியும் என கூறப்பட்டுள்ளது. கூகிள் ஒரு சிறப்பு வகை AI கருவியை உருவாக்கி வருகிறது. இதனால் பல கடுமையான நோய்களை அடையாளம் காண முடிகிறது.


அனைத்து வேலைகளும் கேமரா மூலம் செய்யப்படும்
இந்த கருவி வீட்டில் இருந்தபடியே தோல் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை அடையாளம் காண உதவும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை செய்ய, ஸ்மார்ட்போனின் (Smartphone) கேமராவை தேவைப்படும் தோல் பகுதியை நோக்கி காட்ட வேண்டும். அதன் பிறகு அது மூன்று வெவ்வேறு கோணங்களில் இருந்து படங்களை எடுக்கும். உங்கள் தோல் வகையைப் பற்றி உங்களிடம் கேள்விகள் கேட்கப்படும். உங்களுக்கு எத்தனை காலமாக பிரச்சனை உள்ளது, பிற அறிகுறிகள் ஆகியவை பற்றிய கேள்விகளும் கேட்கப்படும். இவை, சரியான பிரச்சனையை கண்டறிய உதவும். 


ALSO READ: Google Search: கூகிளில் இவற்றை ஒருபோதும் தேடகூடாது; அதனால் பெரும் இழப்பு ஏற்படலாம்


288 வகையான நோய்களை அடையாளம் காண முடியும்
Google AI Health கருவி 288 வகையான தோல் நோய்களை அடையாளம் காணும் திறன் கொண்டது. உங்கள் சருமத்தின் நிலையைப் பார்த்து, உங்களுக்கு எந்த வகையான நோய் வர வாய்ப்புள்ளது என AI கருவி ஆராய்ந்து சொல்லும். இதற்காக, பயனர்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டியதில்லை. லாக்டவுனின் போது கூகிளின் AI ஹெல்த் கருவி மிகவும் உதவியாக இருக்கும். கூகிள், இந்த AI ஹெல்த் கருவியை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யக்கூடும். வரும் நாட்களில், எக்ஸ்ரே போன்ற அம்சத்தை கூகிள் ஹெல்த் கருவியில் சேர்க்கலாம். இந்த கருவியின் உதவியுடன், நோய்கள் விரைவில் அடையாளம் காணப்படும்.


இந்த வழியில் வேலை செய்யும்



இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கலாம்
​இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த ஹெல்த் கருவியை அறிமுகப்படுத்தும் இலக்கு நிறுவனத்துக்கு உள்ளது என நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிமுகமாகவுள்ள இந்த கருவி ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தில் வகுப்பு -1 மருத்துவ சேவையாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ: அமெரிக்க உச்ச நிதிமன்றத்தில் Google இடம் தோற்ற Oracle! காரணம் தெரியுமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR