Reliance Jio அசத்தல் திட்டம்: பிறந்த தேதியை மொபைல் நம்பராக மாற்றலாம்.. வழிமுறை இதோ
Reliance Jio VIP Number: பயனர்கள் தங்களுக்கு விருப்பமான மொபைல் எண்ணைத் தேர்ந்தெடுக்கும் சிறப்புத் திட்டத்தை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது.
மொபைல் போன் பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி!! பயனர்களின் நலனுக்கான பல வித புதிய மற்றும் மலிவு விலை திட்டங்களை அறிமுகம் செய்யும் ரிலயன்ஸ் ஜியோ நிறுவனம், தற்போது மீண்டும் ஒரு புதிய விஷயத்தை செய்துள்ளது. பயனர்கள் தங்களுக்கு விருப்பமான மொபைல் எண்ணைத் தேர்ந்தெடுக்கும் சிறப்புத் திட்டத்தை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. இது பயனர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது ஒரு தனித்துவமான விஐபி எண் வரிசையாகும் (VIP Number Series). அதில் இருந்து நுகர்வோர் எண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஜியோவின் புதிய திட்டத்தில், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான மொபைல் எண்ணின் கடைசி 4 முதல் 6 இலக்கங்களைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த சிறப்பு திட்டத்திற்காக, நீங்கள் பின்பற்ற வேண்டிய சில எளிய குறிப்புகளை ஜியோ வழங்கியுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இந்த தொகையை செலுத்த வேண்டும்
ஜியோவின் புதிய திட்டத்தின்படி, நீங்கள் ஒரு முறை மட்டும் ரூ.499 செலுத்தினால் போதும். ஜியோவின் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இந்த சிறப்பு சலுகை கிடைக்கிறது. ரூ. 499 தவிர வேறு எந்த கூடுதல் கட்டணத்தையும் நுகர்வோர் செலுத்த வேண்டியதில்லை.
இது போன்ற எண்களை தேர்வு செய்யலாம்
ஜியோவின் முன்னுரிமை பட்டியலில், வாடிக்கையாளர்கள் தங்கள் பிறந்த தேதி, ராசியான எண் அல்லது பிடித்த எண் வரிசையுடன் தங்களுக்குப் பிடித்த எண்ணைத் தேர்ந்தெடுக்கும் விருப்பத்தைப் பெறுவார்கள். இதில், முதல் நான்கு அல்லது ஆறு எண்கள் நிலையானதாக இருக்கும். கடைசி எண்களை உங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்கலாம். இந்த செயல்முறை மொபைல் எண் தனிப்பயனாக்கம் (மொபைல் நம்பர் கஸ்டமைசேஷன்) என்றும் அழைக்கப்படுகிறது.
மேலும் படிக்க | ஒரு நபர் எத்தனை வங்கி கணக்கு வைத்துக்கொள்ளலாம்? ரிசர்வ் வங்கியின் புதிய விதி!
பயனர்கள் இதை பயன்படுத்திக்கொள்ள இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்:
- இந்தத் திட்டத்தைப் பயன்படுத்த, முதலில் பயனர்கள் https://www.jio.com/selfcare/choice-number/ என்ற வலைதளத்திற்கு செல்ல வேண்டும்.
- இதற்குப் பிறகு, நீங்கள் செல்ஃப் கேர் செக்ஷன், அதாவது சுய பாதுகாப்புப் பிரிவுக்குச் செல்ல வேண்டும்.
- MyJio மொபைல் செயலி மூலம் பயனர்கள் இந்த நிலையை நேரடியாக அணுகலாம்.
- அதன் பிறகு பயனர்கள் மொபைல் எண் தேர்வுப் பகுதிக்கு(மொபைல் நம்பர் செலக்ஷன் செக்ஷன்) செல்ல வேண்டும்.
- இங்கு பயனர்கள் தங்களிடம் ஏற்கனவே உள்ள எண்ணை உள்ளிட வேண்டும்.
- அதன் பிறகு, OTP மூலம் எண்ணை உறுதி செய்ய வேண்டும்.
- அதன் பின்னர், புதிய எண்ணைத் தேர்ந்தெடுப்பதற்கான விருப்பம் உங்களுக்கு வழங்கப்படும்.
- அங்கு உங்கள் விருப்பப்படி கடைசி 4 முதல் 6 இலக்க எண்ணைத் தேர்வு செய்யலாம்.
- புதிய மொபைல் எண்ணைத் தேர்ந்தெடுத்த பிறகு, நீங்கள் கட்டணம் செலுத்தும் (பேமெண்ட்) ஆப்ஷனுக்குச் செல்ல வேண்டும்.
- அங்கு பயனர்கள் ரூ. 499 கட்டணமாக செலுத்த வேண்டும்.
- சுமார் 24 மணி நேரத்திற்குள், உங்கள் புதிய மொபைல் எண் செயல்படுத்தப்படும்.
மேலும் படிக்க | இனி Google Play Storeல் எந்த ஆப்பிற்கும் கட்டணம் செலுத்த தேவையில்லை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ