பிரபல நிறுவனங்களின் இணையதளப் பக்கங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் ஹேக் செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. மிகவும் பாதுகாப்பான தளம் எனச் சொல்லப்படுபவைகூட ஹேக்கர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு ’தண்ணி’ காட்டப்படுகின்றன. அந்தப் பட்டியலில் தற்போது இணைந்துள்ளது அமேசான். ஆம், ஹேக்கர்கள் இம்முறை கைவைத்திருப்பது ‘Amazon Prime Video India’ வின் யூடியூப் சானலைத்தான்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமேசான் நிறுவனத்தின் திரைப்படங்கள், வெப்சீரீஸ்கள் உள்ளிட்டவை தொடர்பான வீடியோக்கள், செய்திகள், ப்ரோமோக்கள் போன்றவற்றை வெளியிட்டு வந்த அந்தச் சானல் மர்ம நபர்களால் திடீரென ஹேக் செய்யப்பட்டுள்ளது. இன்று காலையில்தான் இந்த நாச வேலையைச் செய்துள்ளனர் அந்த ஹேக்கர்கள். ஹேக் செய்ததோடு மட்டுமல்லாமல்  ‘Amazon Prime Video India’ எனும் பெயரை Ark Invest (Live) என மாற்றியுள்ளனர். ஹேக் செய்யப்பட்டதிலிருந்து அந்த சானலில் க்ரிப்டோ முதலீடு பற்றிய லைவ் வீடியோக்கள் ஸ்ட்ரீமிங்கில் உள்ளன.


                                                   


மேலும் படிக்க | யூடியூபில் வைரல் ஆகா வேண்டுமா? இத பண்ணா போதும்!


சுமார் 7.96 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் தற்போது இந்த சானலில் உள்ளனர். வழக்கமாக ‘Amazon Prime Video India’ வைத் தேடி உள்ளே நுழைந்த பார்வையாளர்கள் பலருக்கு சானல் ஹேக் செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இந்த நிலைமை சரிசெய்யப்பட்டு ‘Amazon Prime Video India’ சானல் மீட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல ஹேக்கிங் விவகாரம் தொடர்பாக அமேசான் நிறுவனம் உரிய விளக்கம் அளிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க| YouTube-ல் பணம் சம்பாதிக்க புதிய வழிகள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR