COVID-க்கு மத்தியில் Coroboi என்ற Mobile Game-ஐ உருவாக்கிய மணிப்பூர் மாணவர்!!
இம்பாலைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவர், பல்தீப் நிங்தூஜாம், COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில் `கொரோபோய்` (Coroboi) என்ற மொபைல் விளையாட்டை உருவாக்கியுள்ளார்.
இம்பால்: இம்பாலைச் (Imphal) சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவர், பல்தீப் நிங்தூஜாம்(Baldeep Ningthoujam), COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில் 'கொரோபோய்' (Coroboi) என்ற மொபைல் விளையாட்டை உருவாக்கியுள்ளார்.
COVID-19 வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த விளையாட்டு இப்போது Android பயனர்களுக்கு கிடைக்கிறது.
கூகிள் பிளே ஸ்டோரில் உள்ள இந்த செயலியின் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் படி, "இந்தியாவில் மணிப்பூரைச் (Manipur) சேர்ந்த கொரோபோய் என்ற ஒரு சிறுவன் வெளியே மாட்டிக்கொண்டு விடுகிறான், வீடு செல்ல விரும்புகிறான். லீரம் பீ (மணிப்பூரி பாரம்பரிய துணி) மற்றும் ஒரு மாஸ்க் அணிந்து, அவன் தனது இலக்கை நோக்கி ஓடுகிறான். அவனது பயணத்தின் போது புள்ளிகளை அவன் சம்பாதுக்க வெண்டும். காவல்துறை அவனைப் பிடித்தால், 5000 புள்ளிகள் அபராதமாக கழிக்கப்படும்."
ANI உடன் பேசும்போது, நிங்தூஜம் ஒரு நெறிமுறை ஹேக்கராக மாற விரும்புவதாகக் கூறினார்.
ALSO READ: COVID-19 குறித்து பயப்பட வேண்டாம்... மருத்துவ நிபுணர்கள் கூறுவது என்ன?...
"நான் ஒரு நெறிமுறை ஹேக்கராக விரும்புகிறேன். செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் பிற தொழில்நுட்பங்களைப் பற்றி மேலும் அறிய விரும்புகிறேன். COVID பற்றிய ஒரு விளையாட்டை உருவாக்க என் மாமா எனக்கு பரிந்துரைத்திருந்தார். அதன் பிறகு எனக்கு அதில் ஆர்வம் ஏற்பட்டது. இந்த கேமை முழுவதுமாக கடந்த வாரம் உருவாக்கி முடித்தேன். அது வெள்ளிக்கிழமை லாஞ்ச் செய்யப்பய்ட்டது" என்று நிங்தூஜம் கூறினார்.
"இது எனக்கு புதிய விஷயம். ஆகையால் நான் இதைப் பற்றிய பல விஷயங்களை யூடியூப்பில் பார்த்து தெரிந்து கொண்டேன். மேலும் இது குறித்த பல கட்டுரைகளையும் படித்தேன். ஒரு மொபைல் கேமை (Mobile Game) எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி தெரிந்துகொள்ள 3-4 வாரங்கள் எடுத்துக்கொண்டேன்” அன்று நிங்தூஜம் என்ற அந்த சிறுவன் மேலும் தெரிவித்தார்.
ALSO READ: இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றி உங்கள் முகமூடியை சுத்தம் செய்யவும்..!