Ather 450X Gen 3: மின்சார ஸ்கூட்டர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, எலக்டிரிக் வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் இப்போது ஆஃப்லைன் விற்பனையை போலவே ஆன்லைன் விற்பனையிலும் கவனம் செலுத்த தொடங்கிவிட்டனர். இந்த வரிசையில், இப்போது மின்சார ஸ்கூட்டர் தயாரிக்கும் நிறுவனமான ஏதர் எனர்ஜி, தனது ஏதர் 450 எக்ஸ் ஜெனரல் 3 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பிளிப்கார்ட்டில் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. முன்னோடி திட்டமாக பார்க்கப்படும் நிலையில், தற்போது புதுதில்லியில் மட்டுமே ஆன்லைன் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம்பல்வேறு நகரங்களுக்கு விரைவில் விரிவுபடுத்தப்படும் என்று ஏதர் எனர்ஜியின் தலைமை வணிக அதிகாரி ரவ்னீத் போகேலா தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ஏதரின் அசுர வளர்ச்சி


ஏதர் எனர்ஜி நிறுவனத்திற்கு செப்டம்பர் மாதத்தில் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. செப்டம்பர் 2022-ல் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 247 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்நிறுவனம் ராஞ்சி, கொல்கத்தா, மும்பை மற்றும் ராஜ்கோட் ஆகிய இடங்களில் 4 புதிய கிளைகளையும் தொடங்கியிருக்கிறது. மேலும், 34% சந்தைப் பங்கைக் கொண்டிருக்கும் ஏதர், கேரளாவில் நம்பர் ஒன் டூ வீலர் EV தயாரிப்பாளராகவும் உள்ளது. கேரளாவில் மட்டும் இந்த நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை அமோகமாக இருப்பதால், ஒட்டுமொத்த எலக்டிரிக் வாகன விற்பனையில் இந்த நிறுவனம் மட்டும் 34 சதவீத சந்தைப் பங்கை பெற்றுள்ளது. சமீபத்தில், ஏதர் எனர்ஜி நிறுவனம் ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டரின் 50,000வது யூனிட்டை வெளியிட்டது.


மேலும் படிக்க | 5ஜி நெட்வொர்க்கை ஈஸியாக பெறலாம்; புது சிம்கார்டு வாங்க வேண்டுமா?


146KM ஜம்முனு போகலாம்


ஏதர் எனர்ஜி தற்போது இந்திய சந்தையில் 450 பிளஸ் மற்றும் 450 எக்ஸ் ஆகிய இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களைக் கொண்டுள்ளது. 450X ஸ்கூட்டரில் 3.7kWh லித்தியம்-அயன் பேட்டரி பேக் உள்ளது. இது Eco, Ride, Sports, Warp என நான்கு ரைடிங் மோடுகளைப் கொண்டுள்ளது. 40 கிமீ வேகத்தை 3.3 வினாடிகளில் எட்டிவிடும். ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கி.மீ.  இதன் சான்றளிக்கப்பட்ட வரம்பு 146 கி.மீ. இதன் விலை ரூ. 1,55,657 (எக்ஸ்-ஷோரூம், பெங்களூர்).



மறுபுறம், 450 பிளஸ் உண்மையான வரம்பில் 85 கிமீ மற்றும் 3.9 வினாடிகளில் 0-40 கிமீ வேகத்தில் வருகிறது. ஏதர் 450X ஆனது Ola S1 Pro, TVS iQube, Bajaj Chetak மற்றும் Simple Energy One போன்ற மின்சார ஸ்கூட்டர்களுடன் மார்க்கெட்டில் கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறது.


மேலும் படிக்க | 5G Smartphones: ரூ.20,000-க்குள் இருக்கும் பெஸ்ட் 5G ஸ்மார்போன்கள் லிஸ்ட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ