Oppo Reno 7 Pro 5G விற்பனை இந்தியாவில் தொடங்கியது, முழு விவரம் இதோ
Oppo Reno 7 Pro 5G ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 OS ஐ அடிப்படையாகக் கொண்டது.
Oppo Reno 7 Pro 5G இன்று முதல் அதாவது பிப்ரவரி 7 முதல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த வாரம் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் இது சிறந்த அம்சங்களுடன் நிறுவனத்தின் முதன்மை ஸ்மார்ட்போன் ஆகும். இது 6.5-இன்ச் முழு HD + AMOLED டிஸ்ப்ளே மற்றும் MediaTek Dimensity 1200-Max செயலியில் வேலை செய்கிறது மற்றும் இதில் 12ஜிபி ரேம் உள்ளது. (5G Smartphone in India) இந்த ஸ்மார்ட்போனில் கிடைக்கும் விலை, அம்சங்கள் மற்றும் சலுகைகள் பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்வோம்.
Oppo Reno 7 Pro 5G: விலை
Oppo Reno 7 Pro 5G ஸ்மார்ட்போனில் சிங்கிள் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. இது 12 ஜிபி ரேம் உடன் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது மற்றும் அதன் விலை ரூ.39,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் (Powerful Smartphone) ஸ்டார்லைட் பிளாக் மற்றும் ஸ்டார்ட்ரெயில்ஸ் ப்ளூ வண்ண வகைகளில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது, மேலும் இதை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் ஆகியவற்றிலிருந்து வாங்கலாம்.
Oppo Reno 7 Pro 5G: சலுகைகள்
Oppo Reno 7 Pro 5G ஸ்மார்ட்போனுடன் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி பேசுகையில், நீங்கள் ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், பாங்க் ஆஃப் பரோடா மற்றும் பெடரல் வங்கி கார்டுகளைப் பயன்படுத்தினால், உங்களுக்கு 10 சதவீதம் அதாவது ரூ. 4,000 கேஷ்பேக் கிடைக்கும். இது தவிர, ஸ்மார்ட்போனை நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்துடன் வாங்கலாம்.
Oppo Reno 7 Pro 5G: அம்சங்கள்
Oppo Reno 7 Pro 5G ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 OS ஐ அடிப்படையாகக் கொண்டது மற்றும் 6.5 இன்ச் முழு HD + AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் ஸ்கிரீன் தெளிவுத்திறன் 1,080×2,400 பிக்சல்கள் மற்றும் இது MediaTek Dimensity 1200-Max செயலியில் வேலை செய்கிறது. இதில் மூன்று பின்புற கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் முதன்மை சென்சார் 50MP ஆகும்.
அதே சமயம் 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் 2MP டெப்த் சென்சார் உள்ளன. மறுபுறம், இது செல்ஃபிக்காக 32MP முன் கேமராவைக் கொண்டுள்ளது. பவர் பேக்கப்பிற்காக, இது 65W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR