கார் பராமரிப்பு குறிப்புகள்: கார் வாங்கும் போது, ​​வாடிக்கையாளர்கள் பல விஷயங்களை கவனித்துக் கொள்கிறார்கள். உதாரணமாக, வாகனத்தில் எந்த எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது, வாகனத்தின் விவரக்குறிப்புகள் என்ன என பல விஷயங்களில் நாம் கவனம் செலுத்துகிறோம்.  ஆனால் பலமுறை கார் வாங்கிய பிறகும் காரை கவனிக்க முடியாமல் பலர் தவிக்கின்றனர். அவசர அவசரமாக பெட்ரோல் என்ஜினில் டீசலையும், டீசல் என்ஜினில் பெட்ரோலையும் போடுவது போன்ற சம்பவங்கள் பல நேரங்களில் நடக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்படி ஒரு நிலை எப்போதாவது ஏற்பட்டால், அது உங்கள் எஞ்சினில் மோசமான விளைவை ஏற்படுத்தும். அவ்வாறு செய்வது வாடிக்கையாளர்களுக்கு பல பிரச்சனைகளை அளிக்கக்கூடும். மேலும் உங்கள் வாகனத்தின் இயந்திரம் செயலிழந்து போகவும் வாய்ப்புள்ளது.


கார் ட்ரான்ஸ்மிஷன் எஞ்சினுடன் இணைக்கப்பட்டுள்ளது 


வாகனத்தின் எஞ்சின் மற்றும் உதிரி பாகங்கள் அதன் எரிபொருள் வகைக்கு ஏற்ப தயாரிக்கப்படுகின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இது மட்டுமின்றி, காரின் முழு டிரான்ஸ்மிஷனும் எஞ்சினுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் டீசலுக்கு பதிலாக பெட்ரோல் போட்டாலோ அல்லது பெட்ரோலுக்கு பதிலாக டீஸல் போட்டாலோ, இதை தவிர்க்கவும், என்ஜினைக் கெடுப்போகாமல் தடுக்கவோ என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.


மேலும் படிக்க | Maruti Suzuki Car Price: மாருதி நிறுவனம் அளித்த ஷாக், கார்களின் விலை உயர்ந்தது 


தவறான எரிபொருளை போட்டுவிட்டால் என்ன செய்ய வேண்டும்? 


- எரிபொருள் டேங்க் பெட்ரோலுடையதாக இருந்து அதில் டீசல் போட்டுவிட்டால், முதலில் வாகனத்தை அணைக்கவும்.


- வாகனத்தை பேட்டரி பயன்முறையில் வைக்க வேண்டாம். அவ்வாறு செய்வது எரிபொருள் பம்பை இயங்க வைத்து அதை உங்கள் எஞ்சின் வரை அனுப்பும். 


- காரை மெக்கானிக்கிடம் எடுத்துச் செல்லுங்கள், ஆனால் காரை மெக்கானிக்கிடம் ஓட்டிச்செல்லாதீர்கள், வேறு வாகனத்தில் எடுத்துச்செல்லுங்கள். 


- மெக்கானிக் எரிபொருள் பைப் லைனை துண்டித்து அதை முழுவதுமாக காலி செய்து சுத்தம் செய்வார். 


- இது தவிர, எரிபொருளை ஊற்றும்போது கவனமாக இருங்கள். உங்கள் வாகனம் பெட்ரோல் வாகனமா அல்லது டீசல் வாகனமா என்பதை பெட்ரோல் பங்கில் தெளிவாகக் குறிப்பிடவும்.


எரிபொருளை தவறாக செலுத்தினால் பெரிய இழப்பு ஏற்படும்


தவறான எரிபொருளை நிரப்புவது வாகனத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும். பெட்ரோல் காரில் டீசல் போட்டு, வாகனத்தை ஸ்டார்ட் செய்தால், இன்ஜெக்டர்கள், ஸ்பார்க் பிளக்குகள், ஃபில்டர்கள் உள்ளிட்டவற்றுடன் என்ஜின் நிறுத்தப்படும் அபாயம் உள்ளது. இப்படி நடந்தால் சென்சார்களும் சேதமடையக்கூடும். ஆனால் டீசல் காரில் பெட்ரோல் செலுத்தப்பட்டால், அந்த நிலையை சமாளிக்க முடியும். இருப்பினும், சென்சார்கள் மற்றும் இன்ஜெக்டர்கள் தவிர, டீசல் வடிகட்டி சேதமடைய வாய்ப்பு உள்ளது.


மேலும் படிக்க | Tata Tigor CNG: அடேங்கப்பா!! வெறும் ரூ. 86,000 செலுத்தி அட்டகாசமான இந்த காரை ஓட்டிச்செல்லலாம்!! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ