Apple iPhone News: குபெர்டினோவை தளமாகக் கொண்ட மாபெரும் தொழுல்நுட்ப நிறுவனமான ஆப்பிள், 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளது. ஆனால் ஒரு கெட்ட செய்தியும் வாடிக்கையாளர்களுக்கு காத்திருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆப்பிள் (Apple) சில பழைய தயாரிப்புகளை நிறுத்தி புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகிறது. இந்த வழக்கம் ஒவ்வொரு ஆண்டும் இருந்து வருகிறது. ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு iPhone XR, iPhone 12 Pro, iPhone 12 Pro Max, iMac Pro மற்றும் HomePod போன்ற சில தயாரிப்புகளின் உற்பத்தியை நிறுத்தியது.


ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ மற்றும் 13 ப்ரோ மேக்ஸ் உற்பத்தியை நிறுத்துகிறது


ஊடக செய்திகளின் படி, புதிய ஐபோன் சந்தையில் வந்தவுடன், ஆப்பிள் இந்த ஆண்டு iPhone 13 Pro மற்றும் 13 Pro Max ஐ நிறுத்த திட்டமிட்டுள்ளது. இது தவிர, மலிவு விலையில் கிடைக்கும் iPhone SE 2020-ம் நிறுத்தப்பட உள்ளது.


ALSO READ | மலிவு விலையில் 5G iPhone வாங்க அரிய வாய்ப்பு, விரைவில் அறிமுகம் 


வாடிக்கையாளர்கள் மற்ற இடங்களில் இருந்து வாங்க முடியும்


நிறுத்தப்படுவது என்பது மாடல்களின் உற்பத்தியை நிறுத்துவதாகும். இருப்பினும், வாடிக்கையாளர்கள் அமேசான் (Amazon), ரிலையன்ஸ் போன்ற பிற தளங்களிலிருந்து இவற்றை வாங்க முடியும். எனினும், ஆப்பிள் ஸ்டோர்கள் மற்றும் இணையதளங்களில் இவற்றை வாடிக்கையாளர்கள் வாங்க முடியாது. இருப்பினும், இ-காமர்ஸ் கடைகளில் நிறுத்தப்படும் இந்த பொருட்களுக்கு பெரும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கும்.


இந்த பொருட்களின் உற்பத்தியும் நிறுத்தப்படும்


Apple Watch Series 7, AirPods Pro, iPad Air 4th Gen, iPod Touch 7th Gen மற்றும் Mac Pro ஆகியவற்றின் உற்பத்தியையும் ஆப்பிள் நிறுத்துகிறது.


ஐபோன் 14 இந்த ஆண்டு அறிமுகம் ஆகும்


இதற்கிடையில், ஆப்பிள் பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தியும் உள்ளது. ஐபோன் 14 குறித்து பல ஊகங்கள் சந்தையில் உள்ளன. ஆப்பிளின் ஐபோன் 14 (iPhone 14) இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்றும் இதில் ஆண்ட்ராய்டு ஃபோனைப் போன்ற ஒரு நாட்ச்-லெஸ் வடிவமைப்பு இருக்கும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


ALSO READ | Flipkart சலுகை: iPhone 12 இல் மெகா பம்பர் தள்ளுபடிகள்.. முந்துங்கள் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR