ரூ. 12,900 மதிப்புள்ள Airpod-களை இலவசமாக வழங்குகிறது Apple: யாருக்கு கிடைக்கும்?

ஆப்பிளின் வருடாந்திர 'பேக் டு யுனிவர்சிட்டி' ஆஃபர் தொடங்கியுள்ளது. இந்த முறை குறிப்பிட்ட பொருட்களை வாங்கும்போது ரூ.12,900 மதிப்புள்ள ஏர்போட்களை வாடிக்கையாளர்கள் இலவசமாகப் பெறலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 8, 2022, 12:02 PM IST
  • ஆப்பிள் ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போன் பிராண்டாகும்.
  • ஐபோன்களுடன், மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் இயர்பட்ஸ் போன்ற சாதனங்களையும் ஆப்பிள் தயாரிக்கிறது.
  • ஆப்பிள் நிறுவனம் ரூ.12,900 மதிப்புள்ள ஏர்போட்களை இலவசமாக வழங்குகிறது.
ரூ. 12,900 மதிப்புள்ள Airpod-களை இலவசமாக வழங்குகிறது  Apple: யாருக்கு கிடைக்கும்? title=

ஆப்பிள் ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போன் பிராண்டாகும். அதன் தயாரிப்புகள் உலகம் முழுதும் மிகவும் விரும்பப்படுகின்றன. ஆனால், அவற்றின் விலை மிக அதிகமாக இருப்பதால், அனைவராலும் ஆப்பிள் பொருட்களை வாங்க முடிவதில்லை. 

ஐபோன்களுடன் (iPhone), மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் இயர்பட்ஸ் போன்ற சாதனங்களையும் ஆப்பிள் தயாரிக்கிறது. 12,900 மதிப்புள்ள ஏர்போட்களை நீங்கள் முற்றிலும் இலவசமாகப் பெறக்கூடிய நிறுவனத்தின் ஒரு சிறந்த சலுகையைப் பற்றி இன்று இந்த பதிவில் காணலாம். 

ஆப்பிள் நிறுவனம் ரூ.12,900 மதிப்புள்ள ஏர்போட்களை இலவசமாக வழங்குகிறது

ஆப்பிளின் (Apple) வருடாந்திர 'பேக் டு யுனிவர்சிட்டி' ஆஃபர் தொடங்கியுள்ளது. இந்த முறை குறிப்பிட்ட பொருட்களை வாங்கும்போது ரூ.12,900 மதிப்புள்ள ஏர்போட்களை வாடிக்கையாளர்கள் இலவசமாகப் பெறலாம். இந்தச் சலுகையின் கீழ், MacBook Air, MacBook Pro, iMac, iMac Pro, Mac Mini, iPad Pro மற்றும் iPad Air உள்ளிட்ட சில தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனங்களை வாங்கினால், வாடிக்கையாளர்கள் Apple வழங்கும் செகண்ட் ஜெனரேஷன் AirPod-களையும் இலவசமாகப் பெறலாம். 

ALSO READ | iPhone 12 Mini பம்பர் தள்ளுபடி, மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க 

இந்தியாவில் தற்போது இந்த சலுகை இல்லை

இந்தச் சலுகை தற்போது இந்தியாவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு புதிய Mac அல்லது iPad இல் கண்டிப்பாக தள்ளுபடி கிடைக்கும். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரேசில் மற்றும் தென் கொரியாவில் உள்ள கல்விக் கடைகள் மூலம் மட்டுமே குறைந்த விலையில் Mac மற்றும் iPad மாடல்களை வாங்க முடியும். AppleCare+ பாதுகாப்பு திட்டங்களில் 20% தள்ளுபடியும் இங்கே வழங்கப்படுகிறது.

இந்தச் சலுகையை இந்த வகையில் பயன்படுத்தலாம் 

இந்தச் சலுகையைப் பெற, வாடிக்கையாளர்கள் முதலில் பதிவு செய்து, UniDays மூலம் பதிவுச் சரிபார்ப்புச் செயல்முறையை நிறைவு செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, இணையதளத்திற்குச் சென்று,  Mac அல்லது iPad மாடலை கார்டில் சேர்க்க வேண்டும். இதற்குப் பிறகு, செக் அவுட் செய்யும் போது, ​​ஆப்பிள் ஏர்போட்களையும் சேர்ப்பதற்கான ஆப்ஷன் கிடைக்கும். இந்த வழியில் வாடிக்கையாளர்கள் இலவச ஏர்போட்களைப் பெறலாம். 

இந்த சலுகை மார்ச் 7, 2022 வரை இருக்கும். இதைப் பயன்படுத்திக் கொள்ள, நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மாணவராகவோ அல்லது அந்த மாணவர்களின் பெற்றோராகவோ இருக்க வேண்டும். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆப்பிள் ஸ்டோர்களில் இருந்து கல்வித் தள்ளுபடிகளைப் (Educational Discount) பெறலாம்.

ALSO READ | Apple இன் Surgical Strike ! Xiaomi, Vivo மற்றும் OPPO க்கு ஆப்பு 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News