மலிவு விலையில் 5G iPhone வாங்க அரிய வாய்ப்பு, விரைவில் அறிமுகம்

ஒவ்வொரு ஆண்டும் போலவே, இந்த ஆண்டும் ஆப்பிள் முதல் நிகழ்வை விரைவில் நடத்தள்ளது. இந்த நிகழ்வில் உலகின் விலை குறைந்த 5ஜி ஐபோன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 10, 2022, 09:35 AM IST
  • ஒவ்வொரு ஆண்டும் போலவே, இந்த ஆண்டும் ஆப்பிள் முதல் நிகழ்வை விரைவில் செய்யும்.
  • இந்த நிகழ்வில் உலகின் விலை குறைந்த 5ஜி ஐபோன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
  • புதிய அறிக்கை விரைவில் வெளிவரும்
மலிவு விலையில் 5G iPhone வாங்க அரிய வாய்ப்பு, விரைவில் அறிமுகம் title=

புதுடெல்லி: ப்ளூம்பெர்க்கின் மார்க் குர்மன் இன்று தனது "பவர் ஆன்" செய்திமடலில் 2022 ஆம் ஆண்டின் ஆப்பிளின் முதல் நிகழ்வு மார்ச் அல்லது ஏப்ரலில் நடைபெறும் என்று கூறினார். 5G ஆதரவு மற்றும் வேகமான சிப் கொண்ட புதிய iPhone SE நிகழ்வின் அறிவிப்புகளில் (iPhone SE 3) சேர்க்கப்படலாம் என்று குர்மன் கூறினார். குர்மன் எழுதிய அறிக்கையில், "2022 ஆம் ஆண்டின் ஆப்பிளின் முதல் மெய்நிகர் நிகழ்வு சில மாதங்களில் நடக்கப் போவதாக கூறியுள்ளார் மற்றும் இந்த நிழ்வு மார்ச் அல்லது ஏப்ரலில் நடக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்".

கடந்த ஆண்டு இதே நேரத்தில் பல தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன
கடந்த ஆண்டு, ஏப்ரல் 20 ஆம் தேதி ஆப்பிள் (Apple) அதன் AirTag ஐட்டம் டிராக்கர், புதிய iPad Pro மற்றும் 24-inch iMac மாடல்கள் M1 சிப், இரண்டாம் தலைமுறை Apple TV 4K மற்றும் iPhone 12 மற்றும் iPhone 12 mini ஆகியவற்றுக்கான புதிய ஊதா வண்ண விருப்பத்தை வெளியிடும் நிகழ்வு நடைபெற்றது.

ALSO READ | iPhone 12 Mini பம்பர் தள்ளுபடி, மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க 

கொரோனா காரணமாக 2020 இல் இந்த நிகழ்வு நடைபெறவில்லை
2020 ஆம் ஆண்டில், ஆப்பிள் எந்த நிகழ்வையும் நடத்தவில்லை, ஒருவேளை அந்த ஆண்டு மார்ச் மாதத்தில் உலகளாவிய தொற்றுநோயாக COVID-19 அறிவிக்கப்பட்டதன் காரணமாகக்கூட இருக்கலாம். மார்ச் 18 அன்று புதுப்பிக்கப்பட்ட மேக்புக் ஏர் மற்றும் ஐபாட் ப்ரோ மாடல்கள் மற்றும் ஏப்ரல் 15 அன்று இரண்டாம் தலைமுறை ஐபோன் எஸ்இ உட்பட பல புதிய தயாரிப்புகளை ஆப்பிள் அதன் இணையதளத்தில் செய்தி வெளியீட்டில் அறிவித்தது.

iPhone SE 2022 தவிர இந்த தயாரிப்புகளும் வழங்கப்படலாம்
புதிய iPhone SEக்கு கூடுதலாக, Apple புதிய 27 இன்ச் iMac மற்றும் உயர்நிலை Mac மினி மாடல்களை M1 Pro மற்றும் M1 Max சிப்களுடன் மார்ச் அல்லது ஏப்ரலில் நடைபெறும் நிகழ்வில் அறிவிக்கலாம். ஜூன் மாதத்தில் நடைபெறும் இன்-பர்சன் E3 வீடியோ கேம் மாநாடு இந்த ஆண்டு மீண்டும் ஆன்லைன் நிகழ்வாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, WWDC இந்த ஆண்டு முற்றிலும் மெய்நிகர் நிகழ்வாக இருக்கும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் குர்மன் கூறினார்.

ALSO READ | Apple இன் Surgical Strike ! Xiaomi, Vivo மற்றும் OPPO க்கு ஆப்பு 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News