கூகுள் நிறுவனம் விளம்பர மார்க்கெட்டில் அதிக்கம் செலுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போட்டிதன்மையை பாதிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் நடந்து கொள்வதுடன் மோனோபோலியாக இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்கள் நிறுவனங்களின் தொழில்நுட்பங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மார்க்கெட்டில் தங்களது வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்துவதாகவும் அந்த நிறுனத்தின் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் ஆச்சரியப்படும் வகையில் கூகுள் நிறுவனத்தின் கிளை நிறுவனமான கூகுள் பார்ட், தங்களின் சொந்த நிறுவனத்துக்கு எதிராகவே நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விளம்பர மார்க்கெட்டில் கூகுள் நிறுவனம் மோனோபோலி செய்வதாக கூகுள் பார்ட் குற்றம்சாட்டியுள்ளது. டிஜிட்டல் விளம்பர சந்தையில் கூகுள் ஏகபோக உரிமையைக் கொண்டுள்ளது என்றும், இது நிறுவனத்தை போட்டிக்கு எதிரான நடத்தையில் ஈடுபட அனுமதித்துள்ளது என்றும் கூறியிருக்கிறது. அது மட்டுமல்லாமல் கூகுள் நிறுவனம் அதன் போட்டியாளர்களை வாங்கியது. இணையதள வெளியீட்டாளர்களை அதன் கருவிகளைப் பயன்படுத்த கட்டாயப்படுத்தியது மற்றும் அதன் விளம்பரப் பரிமாற்றத்திற்கான அணுகலைக் கட்டுப்படுத்தியுள்ளது என்றும் குற்றம்சாட்டியுள்ளது. 


மேலும் படிக்க | ChatGPT Earning: சாட்ஜிபிடி-ஐ மூலம் 100 டாலர் முதலீட்டில் சம்பாதிக்கும் இளைஞர்..! எப்படி?


டிஜிட்டல் விளம்பர சந்தையில் புதுமைகளை தடுக்கிறது. போட்டியைப் பாதுகாப்பதிலும், நுகர்வோர் நியாயமான மற்றும் திறந்த சந்தைக்கான அணுகலை உறுதி செய்வதிலும் ஒரு முக்கியமான படி. நீதிமன்றம் நீதித்துறைக்கு சாதகமாக இருக்கும் என்று நான் நம்புகிறோம். கூகிள் அதன் ஏகபோகத்தை உடைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடும் என்றும் கூகுள் பார்ட் தெரிவித்திருக்கிறது.


இது டெக் உலகில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கூகுள் பார்ட் தங்களின் தாய் நிறுவனமான கூகுள் மீதே வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளை எப்படி எடுத்துக் கொள்வது என தெரியவில்லை என டெக் வல்லுநர்கள் கூறியிருக்கின்றனர். இந்நிலையில், கூகுள் நிறுவனம் கூகுள் பார்ட் பயன்பாட்டின் அணுகலை அமெரிக்கா மற்றும் யுகேவுக்கு கொடுத்திருக்கிறது.  இதில் தவறான முடிவுகளும் வரலாம் என்று முன்னெச்சரிக்கையாக தெரிவித்திருக்கிறது. ஏனென்றால் அண்மையில் ரிலீஸ் செய்யப்பட்ட சோதனையில் கூகுள் பார்ட் தவறான முடிவை கொடுத்ததால் பல லட்சம் ரூபாய் பணத்தை கூகுள் ஒரே ஒரு பதிலுக்காக இழந்தது. அதனையொட்டி முன்னெச்சரிக்கையாக இந்த அம்சத்தை சேர்த்திருக்கிறது.


மேலும் படிக்க | மொபைல் தொலைந்துவிட்டதா? இனி கவலை வேண்டாம்! அரசே கண்டுபிடித்து குடுக்கும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ