சாட்ஜிபிடி கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு டெக் உலகம் அதியசத்தின் உச்சத்தில் நின்று கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாத வகையில் புதிய புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி அடுத்தடுத்த வெர்சன்களில் வெளியாகி புதிய புதுமைகளை படைத்துக் கொண்டிருக்கிறது. இதனை சமயோசித்தமாக பயன்படுத்தினால் பணம் சம்பாதித்து கொண்டுக்கும் மெஷினாக உங்களுக்கு இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் சாட்ஜிபிடியை உங்களுக்கு தகுந்தாற்போல் பணம் கொடுக்கும் மெஷினாக மாற்றுவது எப்படி? என்பதை பற்றி தான்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் தினமும் சாட்ஜிபிடி -ஐ பயன்படுத்தி 100 அமெரிக்க டாலர் முதலீட்டில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். அவர் எப்படி சம்பாதிக்கிறார் என்பதை பற்றி அவரே விளக்கியும் உள்ளார். அவருடைய பெயர் ஜாக்சன் கிரேட்ஹவுஸ் ஃபால். அவர் பிராண்ட் வடிவமைப்பாளரும், எழுத்தாளருமாக இருக்கிறார். கடந்த வாரம் ட்விட்டரில் ஏஐ சாட்போட் பற்றி ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
அதில் நீங்கள் தினமும் 1000 அமெரிக்கன் டாலரை சம்பாதிக்கலாம். சட்டத்திற்கு புறம்பாக நீங்கள் எதையும் செய்யத் தேவையில்லை. குறுகிய காலத்தில் முடிந்தவரை அதிக பணத்தை சம்பாதிக்க கற்றுக் கொள்ளுங்கள். இதற்கு சாட்போட் (chatbot) உதவியாக இருக்கும் என தெரிவித்தார். அவர் என்ன செய்தால் சம்பாதிக்கலாம் என சாட்போட்டிடம் கேட்டிருக்கிறார். கிரீன் கேஜெட் குரு என்ற வணிகத்தைத் தொடங்குமாறு கிரேட்ஹவுஸ் ஃபால் நிறுவனத்திற்கு பாட் அறிவுறுத்தியிருக்கிறது.
அந்த அறிவுறுத்தலின்படி, புதிய நிறுவனத்தை தொடங்கிய ஜாக்சன் கிரேட்ஹவுஸ் ஃபால் முதல் நாளிலேயே $1,378.84 டாலரை திரட்டியிருக்கிறார். இப்போது அவருடைய நிறுவனத்தின் மதிப்பு சுமார் 25,000 அமெரிக்கன் டாலரை எட்டியிருக்கிறது. இமேஜ்-ஜெனரேட்டர் DALL-E போன்ற பிற AI தொழில்நுட்பங்களும் அவருக்கு உதவியாக இருந்திருக்கின்றன.
மேலும் படிக்க | 7th Pay Commission: அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த அந்த நாள்! வந்தது நல்ல செய்தி!
ஜாக்சன் கிரேட்ஹவுஸ் ஃபால் என்ன செய்தார் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்..!
Follow along pic.twitter.com/zu4nvgibiK
— Jackson Greathouse Fall (@jacksonfall) March 15, 2023
கேட்ஜெட் வெப்சைட் உருவாக்கம்
ChatGPT அவருக்கு கிரீன் கேட்ஜெட் குரு வெப்சைட் உருவாக்க படிப்படியான திட்டத்தை வழங்கியது. மேலும் செயல்படுத்தும் விதம், அப்டேட் உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் சாட்ஜிபிடியிடம் கேட்டுக் கொண்ட அவர், அது கொடுத்த அறிவுறுத்தல்களின்படி ஒரே நாளில் கிரீன் கேட்ஜெட் குருவை உருவாக்கியிருக்கிறார்.
மேலும் படிக்க | ChatGPT: ஓபன் ஏஐ சாட்ஜிபிடியால் ஆபத்தில் இருக்கும் 20 தொழில்கள்
டொமைன் மற்றும் ஹோஸ்டிங் வாங்கவும்
முதலில், ChatGPT அவர் ஒரு இணையதள டொமைன் பெயரை தோராயமாக $10-க்கு வாங்க வேண்டும் என்றும், அத்துடன் ஒரு தளம்-ஹோஸ்டிங் திட்டத்தை மாதம் ஒன்றுக்கு $5-க்கு வாங்க வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறது. அதனுடைய மொத்த செலவு $15 ஆகும். அதனையும் செய்திருக்கிறார்.
வெப்சைட் உருவாக்க அறிவுறுத்தல்
அடுத்ததாக ChatGPT, தனது பட்ஜெட்டில் மீதமுள்ள $85-ஐ இணையதளம் மற்றும் உள்ளடக்க வடிவமைப்பிற்காக பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது. "குறைந்த போட்டியுடன் கூடிய லாபம் ஈட்டக்கூடிய இடத்தில்" அவர் கவனம் செலுத்த வேண்டும், சிறப்பு சமையலறை கேஜெட்டுகள் மற்றும் தனித்துவமான செல்லப்பிராணி பொருட்கள் போன்ற விருப்பங்களை பட்டியலிட வேண்டும் என்று அது கூறியது. மேலும், விற்பனைக் கமிஷன்களுக்கு ஈடாக தயாரிப்புகளை ஊக்குவிக்கும் ஒரு தளம், ஒரு இணை வலைத்தளத்தை உருவாக்க சாட்போட் விரும்பியது. எனவே அதிக கமிஷன் விகிதங்களுடன் தொடர்புடைய திட்டங்களை ஆராயும்படி அது அவரிடம் கூறியது.
அங்கிருந்து, ChatGPT டொமைன் பெயரை EcoFriendlyFinds.com பரிந்துரைத்தது. ஆனால் கிரேட்ஹவுஸ் ஃபால் டொமைன் பெயரைப் பெறுவதற்கு $848 செலவாகும் என்பதை அறிந்தபோது, அது மிகவும் மலிவு விலையில் இருக்கும் ஒன்றை பரிந்துரைத்தது: GreenGadgetsGuru.com. அவர் அதை $8.16-க்கு வாங்கினார். பின்னர் $29 தள ஹோஸ்டிங்கிற்கு செலவழித்தார். 100 டாலரில் இப்போது $62.84 எஞ்சியிருக்கிறது.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தல்
இணையதளம் உருவாக்கப்பட்டவுடன், வாடிக்கையாளர்களை ஈடுபடுத்தவும் இணையதள போக்குவரத்தை அதிகரிக்கவும் Facebook மற்றும் Instagram போன்ற சமூக ஊடக தளங்களிலும், Reddit போன்ற ஆன்லைன் சமூக தளங்களிலும் அவர் கட்டுரைகள் மற்றும் தயாரிப்பு மதிப்புரைகளைப் பகிர வேண்டும் என்று ChatGPT பரிந்துரைத்தது. அவர் AI இமேஜ் ஜெனரேட்டரான DALL-E 2-ல் இணையதள லோகோவை உருவாக்கினார். அதற்கும் சாட்ஜிபிடி உதவியிருக்கிறது. அவர் உருவாக்கப்பட்ட லோகோவை எடுத்து, இல்லஸ்ட்ரேட்டரைப் பயன்படுத்தி அதைத் தனது சொந்தமாக்கினார்.
இவையனைத்தும் முடிந்ததும், அவர் ChatGPT தளத்தின் முதல் கட்டுரையை ஜாக்சன் கிரேட்ஹவுஸ் ஃபால் எழுதச் செய்தார். முதல் கட்டுரையாக பத்து சுற்றுச்சூழல் நட்பு சமையலறை கேஜெட்டுகள் என்ற தலைப்பில் கட்டுரையை கேட்டு, தன்னுடைய தளத்தில் பதிவு செய்திருக்கிறார். அந்த கட்டுரையை விளம்பரப்படுத்த சாட்போட் அறிவுரையின்படி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ளிட்ட தங்களுக்கு 40 டாலர்களை செலவழித்திருக்கிறார். பின்னர் அந்த கட்டுரையை தேடுபொறியில் வரவழைக்க முயற்சியை எடுத்திருக்கிறார். முதல் நாளிலேயே 500 அமெரிக்கன் டாலர் முதலீட்டை பெற்றிருக்கிறார். இருப்பினும் முதலீடு குறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை என்றாலும், சாட்ஜிபிடி மூலம் சம்பாதிப்பது எப்படி? என்பதை பொதுவெளியில் பகிர்ந்திருக்கிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ