Super Power SUV: ஒருமுறை சார்ஜ் செய்தால் 536 கிமீ மைலேஜ்
இந்த சக்திவாய்ந்த எஸ்யூவி கார், ஒரே சார்ஜில் 536 கிமீக்கு மேல் ஓடுகிறது...
புதுடெல்லி: ஸ்கோடா தனது என்யாக் IV (Enyaq Coupe IV) எலக்ட்ரிக் எஸ்யூவியின் கூபே பதிப்பு ஜனவரி 31 அன்று வெளியாக உள்ளது. Enyak Coupe IV கார், Volkswagen ID.5 இன் ஸ்கோடா பதிப்பாகும்.
ஐடி.5 என்பது ஃபோக்ஸ்வேகன் ஐடி.4 மாடலாகும், இது கூபே போன்ற கூரையுடன் வருகிறது. தனித்துவமான வடிவமைப்பைத் தவிர, Enyak Coupe வெளியிலும் உள்ளேயும் இருந்து ஒரு உறுதியான SUV ஆகும்.
தற்போதுள்ள மாடலில் இருந்து புதிய மாடலின் முன்பக்க கிரில் எடுக்கப்பட்டிருப்பது ப்ரிவியூ வீடியோவில் பார்க்க முடிகிறது. இதன் கேபின் மிகவும் நவீனமானது மற்றும் இது இன்றைய காலத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.
77 kW-R சக்தி வாய்ந்த பேட்டரி பேக்
புதிய கூபே எஸ்யூவி, முந்தைய மாடலைவிட வேகமானது என்று ஸ்கோடா கூறுகிறது, இருப்பினும் தற்போதைய நிலையான மாடலில் அதே பேட்டரி பேக் பொருத்தப்படும். இந்த எலக்ட்ரிக் எஸ்யூவியுடன் (Electric SUV) 77 கிலோவாட் சக்தி வாய்ந்த பேட்டரி பேக்கை இங்கே காணலாம், இது இந்த காருக்கு ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் 536க்கும் மேற்பட்ட வரம்புகளை வழங்கும்.
ALSO READ | அசத்தல் கார்களில் அபார தள்ளுபடிகள்
இது தவிர, 58 kWh-R பேட்டரியும் இந்த காருடன் வழங்கப்படலாம், இது ஒரு முறை சார்ஜில் 418 கிமீ வரை செல்லும் திறன் கொண்டது. புதிய EV தற்போதைய மாடலில் உள்ள அதே பேட்டரியால் இயக்கப்படுமா என்பதை ஸ்கோடா இன்னும் வெளியிடவில்லை.
கோடியாக் எஸ்யூவி ஃபேஸ்லிஃப்ட்
ஸ்கோடா என்யாக் ரியர் ஆக்சில் மாடலின் சக்தி 179 குதிரைத்திறன் அல்லது 204 குதிரைத்திறன் இருக்கும். இது தவிர இரண்டு பகுதிகளிலும் அச்சு கொண்ட மாடல் இது. இந்த காரின் விலை என்ன என்பதை ஸ்கோடா இன்னும் வெளியிடவில்லை.
ஆனால் இந்த காரின் விலை சாதாரண மாடலை விட அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்கோடா நிறுவனம் கோடியாக் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் பெட்ரோல் மாடலை (Petrol Model) இந்திய சந்தையில் இந்த ஜனவரி 14 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது, இந்த கார், BS6 விதிகளை அமல்படுத்திய பின்னர் ஏப்ரல் 2020 இல் சந்தையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது.
புதிய ஸ்லாவியா செடான் விரைவில் அறிமுகம்
புதிய கோடியாக் எஸ்யூவியைத் தவிர, ஸ்கோடா ஆட்டோ இந்தியாவும் விரைவில் அனைத்து புதிய ஸ்லாவியா செடானையும் அறிமுகப்படுத்தும், இது ஸ்கோடா ரேபிட்க்கு மாற்றாக இருக்கும். செக்மென்ட்டில், இந்த கார் ஹோண்டா சிட்டி மற்றும் ஹூண்டாய் வெர்னா போன்ற கார்களுடன் போட்டியிடும்.
இது வாடிக்கையாளர்களுக்கு டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் தானியங்கி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. EVகளைப் பற்றி பேசுகையில், 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நாட்டில் நிலையான Enyac IVஐ அறிமுகப்படுத்த ஸ்கோடா திட்டமிட்டுள்ளது.
READ ALSO | புத்தாண்டில் ஷாக் கொடுத்த கார் நிறுவனங்கள்: கார்களின் விலைகள் அதிகரித்தன
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR