தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. ஒருபுறம், ஜியோ புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் மக்களை கவர்ந்திழுக்கிறது, மறுபுறம் இதற்கு போட்டியாக புதிய பிளான்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகியில் தற்போது வோடபோன் ஐடியா ஒரு அற்புதமான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதன் முழு விவரத்தை நாம் இங்கே பார்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Vodafone-Idea இன் ரூ .269 திட்டம்
Vi (Vodafone Idea) இன் 269 ரூபாய் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 56 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தில், ஒரு நாளைக்கு 4 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங் (Unlimited Calling) மற்றும் 600 எஸ்எம்எஸ் கொடுக்கப்படுகிறது. அதாவது, இந்தத் திட்டத்தில் மொத்தம் 224 ஜிபி டேட்டாவைப் நீங்கள் பெறுவீர்கள். இது தவிர, Vi Movies & TV Basic அணுகல் வழங்கப்படுகிறது, இதில் பயனர்கள் லைவ் டிவி, நியூஸ், மூவிஸ், ஒரிஜினல் ஷோஸ் போன்றவற்றை பார்க்க முடியும்.


ALSO READ | Vodafone Idea bailout: வோடாஃபோன் எதிர்காலம் என்னவாகும்?


Airtel இன் ரூ 249 திட்டம்
ஏர்டெல்லின் (Airtel) ரூ .249 Plan செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும். கூடுதலாக, அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். அதாவது, இந்தத் திட்டத்தில் நீங்கள் மொத்தமாக 42 ஜிபி டேட்டாவைப் பெறுவீர்கள். இந்த திட்டத்தின் மூலம், Mobile Edition Free Trial அணுகல் வழங்கப்படுகிறது.


Jio இன் ரூ .249 திட்டம்
ஜியோவின் (Reliance Jio) ரூ .249 திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கும். கூடுதலாக, அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். அதாவது, இந்தத் திட்டத்தில் நீங்கள் மொத்தமாக 56 ஜிபி டேட்டாவைப் பெறுவீர்கள். இந்த திட்டத்துடன் Jio செயலிகளின் சந்தாவும் வழங்கப்படுகிறது.


ALSO READ | Vodafone Idea அசத்தல் திட்டம் அறிமுகம்: அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் வரம்பற்ற தரவு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR