Vodafone Idea bailout: வோடாஃபோன் எதிர்காலம் என்னவாகும்?

வோடபோன் ஐடியா நிறுவனம் தொடர்பான பிணை எடுப்பு திட்டம் பற்றி இதுவரை எந்த திட்டமும் தன்னிடம் வரவில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 16, 2021, 10:04 PM IST
  • முன்னோக்கு வரி குறித்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் பின்பற்றப்படும்
  • வோடபோன் ஐடியா நிறுவனம் தொடர்பான பிணை எடுப்பு திட்டம் எப்போது இறுதியாகும்?
  • யுபிஏ அரசால் தொடங்கப்பட்ட எண்ணெய் பத்திரங்களின் கடனுக்கு ஆண்டுக்கு பத்தாயிரம் கோடி வட்டி
Vodafone Idea bailout: வோடாஃபோன் எதிர்காலம் என்னவாகும்? title=

புதுடெல்லி: வோடபோன் ஐடியா நிறுவனம் தொடர்பான பிணை எடுப்பு திட்டம் பற்றி இதுவரை எந்த திட்டமும் தன்னிடம் வரவில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஆனால், இது தொடர்பாக வோடாபோன் ஐடியா நிறுவனத்துடன் மத்திய அரசின் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர். முன்னோக்கு வரி குறித்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை பின்பற்றுவேன் என்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

சீதாராமன் கூறினார்: "அதிகாரிகள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் ஆனால் இதுவரை எனக்கு எந்த திட்டமும் வரவில்லை."

Also Read | Covid Compensation தொடர்பாக 4 வாரத்தில் முடிவெடுக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

கடந்த வாரம், தொலைத்தொடர்பு துறையில் நிறைய மாற்றங்கள் வர இருப்பதாக செய்திகள் வந்தன. குறிப்பாக தகவல் தொழிநுட்ப துறையில் நிறைய மாற்றங்களைக் கொண்டுவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று கூறப்பட்டது. பிரதமர் அலுவலகம் (Prime Minister's Office) தற்போது இதில் ஆர்வம் காட்டி வருகிறது. தொலைத்தொடர்புத் துறைக்கு நிவாரண அட்டவணையை தயாரிக்குமாறு PMO தொலைத்தொடர்புத் துறையை (DoT) கேட்டுள்ளது.

முந்தைய காலாண்டில் இருந்த 6,985.1 கோடி ரூபாய் கடனுடன் ஒப்பிடும்போது, வோடாபோன் ஐடியாவின் பங்குகள் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ .7,312.9 கோடி நிகர இழப்பைப் பதிவு செய்தது. இதன் பின்னணியில் ஆகஸ்ட் 16 அன்று வோடாபோன் ஐடியாவின் பங்களின் மதிப்பு 5.56 சதவீதம் குறைந்து ரூ .5.95 ஆக இருந்தது.

யுபிஏ அரசால் தொடங்கப்பட்ட எண்ணெய் பத்திரங்களின் சுமையால் மத்திய அரசு, பெட்ரோல் விலையில் நிவாரணம் அளிக்க முடியாமல் தவிப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

எண்ணெய் பத்திரங்களுக்கு ஆண்டுதோறும் வட்டியாக தற்போது 10 ஆயிரம் கோடி ருபாய் செலுத்த வேண்டும். இந்த பணம் எங்கள் கையில் இருந்தால், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை குறைத்திருக்க முடியும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.

வருமான வரித்துறை போர்டல் பிரச்சினைகள் குறித்து பேசிய நிர்மலா சீதாராமன், “இன்போசிஸின் நந்தன் நிலேகனியுடன் தொடர்பில் உள்ளோம்.. ICAI மற்றும் 12 வரி வல்லுநர்கள் இன்போசிஸுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு சிக்கலை சரி செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர், ”என்று அவர் கூறினார்.

வருவாய் துறை செயலாளர் வாரந்தோறும் நிலைமையை கண்காணிக்கிறார். கிரிப்டோகரன்சி தொடர்பாகவும் நிலைமை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Also Read | SBI Loans: குறைந்த வட்டியில் கடன் வேண்டுமா? இதோ உங்களுக்காக… 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News