தொழில்நுட்ப துறையில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு வழங்குவதில் பெங்களூரு முதல் இடம் பிடித்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கின்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொழில்நுட்ப துறையில் பட்டம் பெற்றுவிட்டு வேலையில்லாமல் திண்டாடும் இளைஞர்கள் குறித்து இணையதளங்களில் பரவி வரும் கேலி சித்திரங்களை நாம் பார்த்திருக்கின்றோம். குறிப்பாக பொறியியல் படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களின் பட்டியல் எண்ணில் அடங்காதவை.


இந்நிலையில் தொழில்நுட்ப துறையில் வேலைவாய்ப்பினை வழங்கும் நகரங்களை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் பெங்களூரு நகரம் தான் தொழில்நுட்ப வேலைகளை அதிகமாக வழங்குகிறது என முடிவு வெளியாகியுள்ளது. நாட்டின் அளவில் பார்க்கையில் 22% இளைஞர்கள் பெங்களூருவிலேயே தஞ்சம் அடைகின்றனர்.


பெங்களூருவை அடுத்து புதுடெல்லி (நொய்டா, குருகிராம்) நகரம் 11% வேலைவாய்ப்பினை பெற்றுள்ளது. இவ்விரு நகரங்களையும் தொடர்ந்து புனே, ஐதராபாத், மும்பை பின்தொடர்கின்றன.


இதேப்போல் மொஹாலி, அகமதாபாத் ஆகிய நகரங்களும் கனிசமான வேலைவாய்ப்பினை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சென்னைக்கான இடம் இப்பட்டியலில் பின்தங்கிய இடத்தையே பெற்று தந்துள்ளது.


பிரபல வேலை தேடல் இணையதளமாக Indeed நடத்திய இந்த ஆய்வில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது... வேலை தேடும் நபர்கள் பெரும்பாலும் 20-29 -க்கு இடைப்பட்ட வயதில் இருப்பவர்கள் இப்பெரு நகரங்களில் வேலை தேட முனைப்பு காட்டுகின்றனர் எனவும், 40-49 வயதுக்குட்பட்ட நபர்கள் குறைந்தளவிலான ஆர்வத்தையே காட்டுகின்றனர் எனவும் தெரிவிதுள்ளது.