மழைக்காலங்களில் ஸ்மார்ட்போனைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள சிறந்த வழிகள்
Best Accessories for Phone: திடிரென மழை பெய்தால், ஸ்மார்ட்போன் மழையில் நனைந்துவிடும் என்ற ஆச்சம் அனைவருக்கும் இருக்கிறது. எனவே எச்சரிக்கையாக இருப்பது நமக்கும் நமது போனுக்கும் நல்லது.
Best Accessories for Phone: இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. தற்போது பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. எப்போ, எந்த நேரத்தில் மழை பெய்யும் எனச் சரியாகக் கணிக்க முடியாது. ஆலுவலகத்திற்கு செல்லும் போதோ அல்லது வெளியில் செல்லும் போதோ திடிரென மழை பெய்தால், இதுபோன்ற சூழ்நிலையில், நம்மிடம் உள்ள ஸ்மார்ட்போன் மழையில் நனைந்துவிடும் என்ற ஆச்சம் அனைவருக்கும் இருக்கிறது. இதன் காரணமாக நமது போன் பழுதடைய வாய்ப்பு அதிகம். எனவே எச்சரிக்கையாக இருப்பது நமக்கும் நமது போனுக்கும் நல்லது.
அதனால்தான் ஸ்மார்ட்போனுக்கு சேதம் ஏற்படாமல் இருக்க சில மலிவான பாகங்கள் பற்றி நாங்கள் உங்களுக்கு சொல்லப்போகிறோம். இது பிளிப்கார்ட், அமேசான் மற்றும் உள்ளூர் சந்தை உட்பட ஆன்லைன் நிறுவனம் மூலம் வாங்கலாம். அதுக்குறித்து பார்ப்போம். இதில் ஸ்மார்ட்போன் பை (Smartphone Pouch) உள்ளிட்ட பல புதிய விஷயங்கள் உள்ளன.
ஜிப் லாக் பை (Zip lock bag)
ஆன்லைன் சந்தைகள் உள்ளிட்ட ஆஃப்லைன் சந்தைகளில் ஜிப் லாக் பைகளை நீங்கள் காண்பீர்கள். மழையின் போது உங்கள் தொலைபேசியைப் பாதுகாப்பாக வைத்திருக்க நீங்கள் இதைப் பயன்படுத்தலாம். பெரும்பாலும் மக்கள் பாலிதீனைப் (Polyethylene) பயன்படுத்துகிறார்கள். அதற்குள் சில சமயங்களில் தண்ணீர் உள்ளே செல்கிறது. இருப்பினும், நீங்கள் சிலிக்கா ஜெலுடன் கூடிய ஒரு ஜிப் லாக் பையை வாங்கினால், அது ஈரப்பதத்தை உறிஞ்சுவதால் பாதுகாப்பாக இருக்கும்.
ALSO READ | மொபைல் திரையை பாதுகாக்கும் Screen Guard உங்கள் மொபைலுக்கு சேதத்தையும் ஏற்படுத்தலாம்
பாலிபேக் மற்றும் காகிதங்கள் (Polybag and Paper)
திடீரென மழை பெய்தால், அருகில் ஜிப் லாக் பை இல்லை என்றால், நீங்கள் பாலிபேக் மற்றும் பேப்பரைப் பயன்படுத்தலாம். இதை பயன்படுத்துவதற்கு முன், முதலில் உங்கள் ஸ்மார்ட்போனை அணைக்கவும், பின்னர் ஸ்மார்ட்போனை காகிதத்தில் வைத்து மடிக்கவும். அதன் பிறகு அதை ஒரு பாலிபேக்கில் வைக்க வேண்டும்.
வாட்டர் ப்ரூப் கவர்கள் (Water-proof covers)
வாட்டர் ப்ரூப் கவர்கள் உங்கள் பகுதியின் உள்ளூர் சந்தையிலும் ஆன்லைன் சந்தையிலும் எளிதாக கிடைக்கிறது. இதன் விலை 100 ரூபாய்க்கும் குறைவாக தான் இருக்கும். அது நீங்கள் வாங்கும் தரத்தை பொருத்தது. மழை பெய்யும் போது, நீங்கள் தொலைபேசியை அதற்குள் வைத்துக்கொள்ளலாம். மேலும் உங்களுக்கு வரும் குரல் அழைப்புகள், செய்திகள், மெசேஜ் போன்றவற்றையும் பார்க்கலாம்.
ALSO READ | Refurbished Smartphone: ₹2899 என்ற விலையில் வாங்க அற்புத வாய்ப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR