பெட்ரோல்-டீசல் விலைகள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருகின்றன. மலிவு விலையில் கிடைக்கும் மோட்டார்சைக்கிள்கள் இந்த நேரத்தில் மிகவும் பயனுள்ள தேர்வாக உருவாகியுள்ளன. குறைந்த விலை மற்றும் மைலேஜின் அடிப்படையில் பல சிறந்த பைக்குகள் மக்களின் கவனத்தை கவர்ந்து வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை மிக அதிகமாக உள்ள நிலையில், நாம் இந்த பதிவில் காணப்போகும் மோட்டார் சைக்கிள்கள் குறைந்த அளவு பெட்ரோலையே பயன்படுத்துகின்றன. இது நடுத்தர வர்க்க குடும்பங்களின் மிகவும் விருப்பமான பிரிவு ஆகும். இந்த மோட்டாட்சைக்கிள்கள் தசாப்தத்திற்கும் மேலாக அவர்களின் முன்னுரிமையாக உள்ளன. இந்த பதிவில், ரூ.50,000-60,000 வரையிலான விலை கொண்ட, நல்ல மைலேஜ் கொண்ட வலிமையான பைக்குகள் பற்றிய தகவல்களைக் காணலாம். 


பஜாஜ் சிடி 100


சிடி 100 நிறுவனத்தின் மலிவான பைக் ஆகும். இது எலக்ட்ரிக் ஸ்டார்ட்டுடன் விற்பனை செய்யப்படுகிறது.  மும்பையில் இதன் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.52,510 ஆகும். டாப் மாடலுக்கு இதன் விலை ரூ.60941 வரை செல்கிறது. இந்த பைக் ரூ.50,000க்கு கீழ் உள்ள சிறந்த பட்ஜெட் பைக்குகளில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 102 சிசி இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோலில், இந்த பைக்கை 90 கிமீ வரை ஓட்ட முடியும்.


மேலும் படிக்க | Technology Cars: 2022ம் ஆண்டின் சிறந்த தொழில்நுட்பக் கார்கள்! Glanza முதல் BMW iX Flow வரை 


டிவிஎஸ் ஸ்போர்ட்


டிவிஎஸ் ஸ்போர்ட் ஒரு ஸ்டைலான பைக் ஆகும். இதில் சில நல்ல அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இது 7.8 பிஎஸ் பவரையும், 7.5 என்எம் பீக் டார்க்கையும் வழங்கும் 99.7 சிசி எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த இன்ஜின் 4-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. பைக்கின் முன் பகுதியில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்புறம் ட்வின் ஷாக் அப்சார்பர்களும் உள்ளன. இந்த பைக்கை 1 லிட்டர் பெட்ரோலில் 75 கிமீ வரை ஓட்ட முடியும். மும்பையில் இதன் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.57,967ல் தொடங்கி ரூ.63,176 வரை செல்கிறது.


ஹீரோ எசெஃப் டீலக்ஸ்


இந்த பைக் இந்திய சந்தையில் மிகவும் விரும்பப்படுகிறது. இது 5 வகைகளில் கிடைக்கிறது. இந்த பைக் 8.36 பிஎஸ் பவரையும், 8.05 என்எம் பீக் டார்க்கையும் வழங்கும் 97.2 சிசி எஞ்சினுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கை 1 லிட்டர் பெட்ரோலில் 82.9 கிமீ வரை ஓட்ட முடியும். இந்த பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை மும்பையில் ரூ.52,040ல் தொடங்கி ரூ.62,903 வரை செல்கிறது. இதனுடன், ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டம், 5-ஸ்போக் அலாய் வீல்கள் மற்றும் ஹெட்லைட் ஆன் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.


பஜாஜ் பிளாட்டினா 100


பஜாஜ் பிளாட்டினா 100 2005 ஆம் ஆண்டில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட மிகவும் மலிவு விலையில் உள்ள பைக்குகளில் ஒன்றாகும். மேலும் நிறுவனம் இந்த பைக்கின் 5 லட்சம் யூனிட்களை இதுவரை விற்பனை செய்துள்ளது. இந்த பைக் கிக்-ஸ்டார்ட் மற்றும் எலக்ட்ரிக்-ஸ்டார்ட் வகைகளில் கிடைக்கிறது மற்றும் இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.52,861 ஆகும். இதன் விலை டாப் மாடலுக்கு ரூ.63,541 வரை செல்கிறது. பைக்குடன் 102 சிசி இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. 1 லிட்டர் பெட்ரோலில் 90 கிமீ வரை பைக்கை ஓட்ட முடியும்.


மேலும் படிக்க | குறைந்த விலையில் Ola S1 Pro வாங்க இதுவே கடைசி வாய்ப்பு 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR