Top Smartphones with Best Battery: இந்த காலத்தில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு மிக அதிகமாக உள்ளது. கேமிங்க், வீடியோ சர்ஃபிங் மற்றும் இன்னும் பல பயன்பாடுகளின் காரணமாக போனின் பேட்டரி விரைவாக தீர்ந்துவிடுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அத்தகைய சூழ்நிலையில், வலுவான பேட்டரி கொண்ட நல்ல பேக் அப் உடைய போன்களுக்கான தேடல் அதிகமாக உள்ளது. பேட்டரி பேக்அப் சிறப்பாக உள்ள மற்றும் வேகமாக சார்ஜ் ஆகும் வசதியுடன் கூடிய சில சமீபத்திய 5G ஸ்மார்ட்போன்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இவை மற்ற அம்சங்களிலும் சிறந்த போன்களாக உள்ளன.


1. Samsung Galaxy M52 5G


இந்த Samsung ஃபோன் 5000mAh பேட்டரியுடன் வருகிறது. இதில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதன் விலை சுமார் 24,999 ரூபாய் ஆகும். இந்த ஃபோனில் Snapdragon 778 SoC செயலி பொருத்தப்பட்டுள்ளது. தொலைபேசியின் திரை அளவு 6.67 அங்குலங்கள், இது முழு HD + AMOLED திரையுடன் வருகிறது.


2. Poco F3 GT 5G


Poco-வின் இந்த ஃபோன் பேட்டரியின் அடிப்படையில் மட்டுமல்ல, ஸ்டோரேஜிலிருந்து பிராசசர் வரை அனைத்து இடங்களிலும் சிறப்பாக செயல்படுகிறது. 5065mAh பேட்டரி திறன் கொண்ட இந்த போனில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது. இந்த தொலைபேசி 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜுடன் வருகிறது. 


இந்த போனின் கேமராவும் நன்றாக இருக்கிறது. இதில் 64 மெகாபிக்சல் டிரில் பின்புற கேமராவைப் பெறலாம். திரையைப் பற்றி பேசுகையில், இது 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. போனின் விலை ரூ.28,999 ஆகும்.


ALSO READ:புது Realme 5G ஃபோன் வாங்க வாய்ப்பு; எங்கே தெரியுமா? 


3. Realme X7 Max 5G


இந்த ரியல்மீ (Realme) போனில் 4500mAh பேட்டரி மற்றும் 50W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. சுமார் 26,999 ரூபாய் கொண்ட இந்த போனில் 64 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.43-இன்ச் முழு HD + sAMOLED டிஸ்ப்ளே உள்ளது.


4. Xiaomi Mi 11X 5G


இந்த போனில் 4520mAh பேட்டரி கிடைக்கும். இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,999 ஆகும். இதில் உள்ள கேமரா 48 மெகாபிக்சல்களைக் கொண்டுள்ளது. இந்த போன் Qualcomm Snapdragon 870 SoC இல் இயங்குகிறது. இந்த போனில் 6.67 இன்ச் முழு HD + E4 AMOLED டிஸ்ப்ளே உள்ளது.


5. OnePlus Nord 2 5G


இந்த ஒன்பிளஸ் (OnePlus) 5ஜி போனின் மிகப்பெரிய அம்சம் அதன் வேகமான சார்ஜிங் திறன் ஆகும். அரை மணி நேரத்தில் இந்த போனின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்துவிடலாம். இந்த ஸ்மார்ட்ஃபோன் இரட்டை செல் 4500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் வார்ப் சார்ஜ் 65T ஐ ஆதரிக்கிறது. இந்த போனின் விலை சுமார் ரூ.29,999 ஆகும். போனில் 50 மெகாபிக்சல்கள் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா உள்ளது. போனின் திரை அளவு 6.43 இன்ச் ஆகும். இது முழு HD + AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது.


ALSO READ:OnePlus இன் சமீபத்திய ஸ்மார்ட்போன் இந்த பெயரில் இந்தியாவில் அறிமுகமாகிறது 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR