புது Realme 5G ஃபோன் வாங்க வாய்ப்பு; எங்கே தெரியுமா?

ஆன்லைன் ஷாப்பிங் தளமான Flipkart நவம்பர் 19 முதல் ஒரு சிறப்பு மொபைல் போனான்ஸாவைத் தொடங்கியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 21, 2021, 11:29 AM IST
புது Realme 5G ஃபோன் வாங்க வாய்ப்பு;  எங்கே தெரியுமா? title=

புதுடெல்லி: இ-காமர்ஸ் இணையதளமான ஃபிளிப்கார்ட் (Flipkart) அதன் பயனர்களுக்கு அவ்வப்போது பல சுவாரஸ்யமான சலுகைகளை வழங்கி வருகிறது. அக்டோபர் முதல் ஃபிளிப்கார்ட்டில் விற்பனை நடந்து வருகிறது, இந்த விற்பனை பிக் பில்லியன் நாட்களில் (Big Billion Days) தொடங்கி பிக் தீபாவளி விற்பனை (Big Diwali Sale) வரை தொடர்ந்தது. தற்போது மீண்டும், Flipkart ஒரு சிறப்பு மொபைல் போனான்ஸாவுடன் (Mobile Bonanza) வந்துள்ளது, அதன் கடைசி நாள் இன்று. இன்று நாம் இந்த விற்பனையின் அத்தகைய சலுகையைப் பற்றி காண உள்ளோம், இதில் நீங்கள் Realme இன் சமீபத்திய 5G ஸ்மார்ட்போனை மிக மலிவாகப் பெறுவீர்கள்.

மிகவும் குறைந்த விலையில் Realme 8s 5G
Realme 8s 5G சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் சந்தையில் அதன் விலை ரூ.20,999 ஆகும். Flipkart இன் Mobile Bonanza இலிருந்து இந்த 5G ஸ்மார்ட்போனை ரூ.17,999க்கு 14% தள்ளுபடிக்குப் பிறகு வாங்கலாம். இந்தச் சலுகை இத்துடன் முடிவடையவில்லை, இந்த ஒப்பந்தத்தில் நீங்கள் Flipkart Axis வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால் 5% கேஷ்பேக் அதாவது ரூ.900 தள்ளுபடியைப் பெறுவீர்கள்.

ALSO READ | Realme போன்களின் அட்டகாச அறிமுகம்: கசிந்த தகவல்கள் இதோ

எக்ஸ்சேஞ்ச் சலுகையுடன் கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்
உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு ஈடாக Realme 8s 5G வாங்கினால், இந்த டீலில் கிடைக்கும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரிலிருந்து ரூ.14,250 வரை தள்ளுபடியைப் பெறலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், ஒட்டுமொத்தமாக இந்த போனில் ரூ.18,150 தள்ளுபடி கிடைக்கும், இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.2,849 ஆக குறையும்.

இந்த போனின் சிறப்பு என்ன?
5G சேவைகள் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 6GB RAM மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. MediaTek Dimension 810 5G சிப்செட்டில் இயங்கும் நீங்கள் 6.5-இன்ச் முழு HD + LCD இன்-செல் டிஸ்ப்ளே, 5,000mAh பேட்டரி மற்றும் 33W டேஷ் சார்ஜிங் ஆதரவு, 64MP பிரதான சென்சார் மற்றும் 16MP முன்பக்க கேமராவுடன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பும் வழங்கப்படும். இது ஆண்ட்ராய்டு 11 இல் இயங்கும் இரட்டை சிம் ஸ்மார்ட்போன் ஆகும்.

Flipkart இன் Mobile Bonanza மூலம் இதுபோன்ற பல சலுகைகளை நீங்கள் அனுபவிக்க முடியும். ஒவ்வொரு சிறந்த பிராண்ட் ஸ்மார்ட்போனிலும் நீங்கள் தள்ளுபடிகளைப் பெறுவீர்கள், ஆனால் Flipkart இன் இந்த விற்பனை இன்று வரை மட்டுமே.

ALSO READ | பிளிப்கார்ட் சேலில் படு டிமாண்டில் இருக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்களின் பட்டியல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News