பாதி விலையை விட குறைவாக கிடைக்கிறது iPhone 11: அமேசானில் அதிரடி விற்பனை
IPhone 11: அசத்தலான ஐபோன் 11-ஐ பாதி விலைக்கும் குறைவாக எப்படி வாங்குவது என இந்த பதிவில் காணலாம்.
இன்றைய காலகட்டத்தில் அனைவரின் கையிலும் ஸ்மார்ட்போன் உள்ளது. சந்தையில் பல ஸ்மார்ட்போன் பிராண்டுகள் இருந்தாலும், ஒரு பிரீமியம் பிராண்டாக, எப்போதும் மக்களை ஈர்க்கும் வகையில் இருக்கும் பிராண்டாக இருப்பது ஆப்பிள் ஆகும்.
ஆப்பிளின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களான ஐபோன்கள் அனைத்து விதமான சமீபத்திய அம்சங்களையும் பெற்றிருந்தாலும், மிக அதிக விலை காரணமாக அனைவராலும் அவற்றை வாங்க முடிவதில்லை. இந்த பதிவில், அசத்தலான ஒரு ஐபோனை பாதி விலைக்கும் குறைவாக எப்படி வாங்குவது என காணலாம்.
ஐபோன் 11: பெரும் தள்ளுபடியைப் பெறுங்கள்
இந்த டீலில், ஐபோன் 11 இன் 64 ஜிபி மாறுபாட்டில் பல சலுகைகள் கிடைக்கின்றன. ரூ.64,900 விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஐபோன் 11 போனை, ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசானில் ரூ.49,900க்கு வாங்கலாம்.
இந்த டீலில் பல வங்கிச் சலுகைகளும் சேர்க்கப்பட்டுள்ளதால், இதில் அதிக தள்ளுபடிகளைப் பெறலாம். எஸ்பிஐ வங்கியின் கிரெடிட் கார்டுகள், ஐசிஐசிஐ வங்கி அல்லது கோடக் வங்கி கார்டுகள் ஆகியவற்றை கொண்டு இந்த போனை வாங்கினால், இதில் நான்காயிரம் ரூபாய் தள்ளுபடி பெறலாம். இதன் மூலம் போனின் விலை ரூ.45,900 ஆகக்குறையும்.
மேலும் படிக்க | ரூ.249-க்கு கிடைக்கும் ரியல்மீ ஸ்மார்ட்போன்! ஆஃபரை தவறவிடாதீர்கள்
ஐபோன் 11: பாதி விலைக்கும் குறைவாக எப்படி வாங்குவது?
ஐபோன் 11ஐ பாதி விலைக்கும் குறைவாக வாங்க, இந்த டீலில் சேர்க்கப்பட்டுள்ள எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பயன்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு பதிலாக இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால், ரூ.14,950 வரை சேமிக்கலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் பெறும் வாடிக்கையாளர்கள் இந்த ஐபோன் 11ஐ ரூ.30,950க்கு வாங்க முடியும்.
ஐபோன் 11: அம்சங்கள்
இந்த டீலில், ஐபோன் 11 இன் 64 ஜிபி சேமிப்பக மாறுபாட்டில் பல சலுகைகள் கிடைக்கின்றன. இதில் 6.1 இன்ச் லிக்விட் ரெடினா எச்டி எல்சிடி டிஸ்ப்ளே, வேகமாக சார்ஜ் செய்யும் வசதி மற்றும் ஃபேஸ் ஐடி அம்சம் ஆகியவை உள்ளன. இந்த ஆப்பிள் ஸ்மார்ட்போன் A13 பயோனிக் சிப்பில் வேலை செய்கிறது மற்றும் IP68 மதிப்பீட்டில் வருகிறது. அதாவது இது தூசி மற்றும் தண்ணீரில் கெட்டுப்போகாது. இதில் இரட்டை பின்புற கேமரா அமைப்பு கிடைக்கிறது. இவை இரண்டும் 12எம்பி சென்சார்கள். ஐபோன் 11 இன் முன் கேமராவும் 12 எம்.பி.-ஐ கொண்டுள்ளது.
மேலும் படிக்க | 150W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் புதிய OnePlus!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR