iPhone பயனர்களுக்கு பெரிய அதிர்ச்சி: இந்த போன் இனி கிடைக்காது

iPhone SE3: ஆப்பிள் இந்த மாத தொடக்கத்தில் iPhone SE 3 ஐ அறிமுகப்படுத்தக்கூடும். அதற்கு முன்னதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 3, 2022, 12:39 PM IST
  • ஆப்பிள் இந்த மாத தொடக்கத்தில் iPhone SE 3 ஐ அறிமுகப்படுத்தக்கூடும்.
  • அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, தொலைபேசியைப் பற்றி கசிவுகள் மற்றும் பல வதந்திகள் வெளிவந்துள்ளன.
  • கடைகளில் iPhone SE 2 இன் அதிக யூனிட்கள் கிடைக்கவில்லை.
iPhone பயனர்களுக்கு பெரிய அதிர்ச்சி: இந்த போன் இனி கிடைக்காது title=

ஆப்பிள் இந்த மாத தொடக்கத்தில் iPhone SE 3 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தக்கூடும். அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, இந்த தொலைபேசியைப் பற்றிய பல கசிவுகளும் வதந்திகளும் வெளிவந்துள்ளன. புதிய அறிக்கையில் வெளியாகியுள்ள தகவல் ஐபோன் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

ஐபோன் எஸ்இ 3 அறிமுகத்திற்குப் பிறகு ஐபோன் எஸ்இ 2 இல்லாமல் போகலாம் என புதிய அறிக்கை வெளியாகியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், ஐபோன் எஸ்இ3-ன் இருப்பு விரைவில் ஆஃப்லைன் கடைகளில் தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவுட் ஆஃப் ஸ்டாக் ஆகிறது இந்த போன்

அமெரிக்கா முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட ஸ்டோர் ஆய்வுகள் குறைந்த சரக்கு இருப்பு மற்றும் போனின் சில சாதனங்கள் கடைகளில் கிடைக்காததை இதற்கு காரணமாக காட்டுகின்றன. கனடாவில் உள்ள முக்கிய கடைகள் மற்றும் ஜான் லூயிஸ் மற்றும் ஆர்கோஸ் போன்ற பிரபலமான இங்கிலாந்து ஸ்டோர்களிலும் இதேபோன்ற நிலைமை உள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, இங்கிலாந்தில் ஆப்பிள் இணையதளம் வழியாக டெலிவரி செய்வதற்கான காத்திருப்பு நேரம் இப்போது இரண்டு வாரங்களுக்கு மேல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | விளம்பரத்துக்கு ’நோ’ சொல்ல கூகுளின் புதிய திட்டம் 

ஐபோன் எஸ்இ2 யூனிட்கள் குறைவாக கிடைக்கின்றன

பிப்ரவரி தொடக்கத்தில் இருந்து மிகக் குறைவான ஐபோன் எஸ்இ2 யூனிட்களைப் பெறுவதாக இங்கிலாந்தில் உள்ள ஆப்பிள் சில்லறை விற்பனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியதாக iMore கூறுகிறது. இது இந்த ஸ்மார்ட்போனுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போனின் இருப்பு குறைவதற்கும் செமிகண்டக்டர் குறைபாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடதக்கது. 

ஐபோன் எஸ்இ3: விலை குறைவாக இருக்கலாம்

ஐபோன் எஸ்இ3 ஆனது அதன் முந்தைய மாடலை விட குறைவான விலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் மீண்டும் அதே பழைய வடிவமைப்பு மறுசுழற்சி செய்யப்படக்கூடும். ஐபோன் எஸ்இ 2- ஐ விட $100 (ரூ. 7,570) மலிவாக, சுமார் $300 (ரூ. 22,712)க்கு இந்த போன் விற்கப்படலாம் என்று ஆய்வாளர் ஜான் டோனோவனின் அறிக்கையில் மதிப்பிட்டப்பட்டுள்ளது. மேலும், ஐபோன் எஸ்இ3 ஆனது A15 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படுவதால், இதற்கும் 5ஜி ஆதரவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

மேலும் படிக்க |  Flipkart Big Bachat Dhamal விற்பனை நாளை; எக்கசக்க தள்ளுபடி 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News