Moto G4: ரூ.8 ஆயிரத்திற்கும் குறைவா... 8ஜிபி RAM மொபலை தேடுறீங்களா... இதோ உங்களுக்காக!
Moto G4 Price: ரூ. 8 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் 8ஜிபி RAM மற்றும் 128ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகி உள்ளது.
Moto G4 Price: உலகிலேயே மக்கள்தொகை அதிகம் கொண்ட நாடாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, மனித வளத்தில் இளைஞர்களை அதிகம் உள்ளடக்கிய நாடும் இதுதான். அந்த வகையில், இன்றைய நவீன காலகட்டத்திற்கு ஏற்ற லேட்டஸ்ட் சாதனங்கள் முதல் கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு தேவைப்படும் நவீன சாதனங்கள் வரை அனைத்தும் இந்திய சந்தையில் கிடைக்கின்றன.
ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் தங்களின் பட்ஜெட்டிற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் சாதனங்களை வாங்க வேண்டும் என நினைப்பார்கள். குறிப்பாக, ஸ்மார்ட்போன் இப்போது பல விஷயங்களில் உபயோகமாகிறது என்பதால் மக்கள் தங்கள் பயன்பாடுக்கு ஏற்றவாறு அதனை தேர்வு செய்கின்றனர். அந்த வகையில் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய புதிய மொபைல் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது.
அதாவது, Moto G04 ஸ்மார்ட்போன் இந்தியாவில் கொண்டுவரப்பட்டது. இது Moto நிறுவனத்தின் மிகவும் தொடக்க நிலை மாடல்களாகும். இந்த மொபைல் 6.6 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. மேலும், இதில் Unisoc T606 பிராஸஸர் உடன் பொருத்தப்பட்டுள்ளது. 8ஜிபி RAM மற்றும் 128ஜிபி வரை இன்டர்நெல் ஸ்டோரேஜ் உள்ளது. இந்த மொபைலில் 16MP பின்புற கேமரா உள்ளது. 5MP செல்ஃபி கேமரா இதில் உள்ளது.
மேலும் படிக்க | OnePlus 11R 5G: 16GB ரேம், 50MP கேமரா மொபைலுக்கு 3 ஆயிரம் விலையை குறைத்த ஒன்பிளஸ்
இந்த மொபைலில் 5000mAh பேட்டரி உள்ளது. இதில் 15W சார்ஜிங் ஆதரவு உள்ளது. தொலைபேசியில் சார்ஜ் செய்ய USB Type-C போர்ட் உள்ளது. இந்த மொபைல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 102 மணிநேரம் வரை மியூசிக் பிளேபேக்கை வழங்கும் என்று Moto நிறுவனம் கூறுகிறது. இது டால்பி அட்மாஸ் மேம்படுத்தப்பட்ட ஸ்பீக்கர்களை ஆடியோவிற்காக கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் Moto G04 போனின் ஆரம்ப விலையை 6,249 ரூபாய் ஆக வைத்துள்ளது. இந்த விலை போனின் 4ஜிபி RAM மற்றும் 64ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் வேரியண்டிற்கானது. அதே நேரத்தில் 8ஜிபி RAM மற்றும் 128ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் வேரியண்ட் 7 ஆயிர்து 999 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கருப்பு, நீலம், பச்சை, ஆரஞ்சு உள்ளிட்ட நான்கு வண்ண ஆப்ஷன்களில் இந்த மொபைல் கிடைக்கின்றன. இந்த போனின் விற்பனை பிளிப்கார்ட் மற்றும் மோட்ரலா தளத்தில் வரும் பிப்ரவரி 22ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | இந்திய மார்க்கெட்டில் இருக்கும் டாப் 5 ஸ்பீடு பைக்குகள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ