மாருதியின் இந்த 3 கார்களை வாங்க அலைமோதும் மக்கள்: விலையை கேட்டால் நம்ப முடியாது
Best Selling Maruti Cars: டாப்-10 கார்களின் பட்டியலில் முதல் 3 மாடல்கள் மாருதி சுஸுகியின் மாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 2022 இல் அதிகம் விற்பனையான முதல் 3 கார்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
அதிகம் விற்பனையாகும் மாருதி கார்கள்: அக்டோபர் 2022 இல் கார் விற்பனையில் மாருதி சுஸுகி எப்போதும் போல முன்னணியில் உள்ளது. விற்பனையைப் பொறுத்தவரை, டாப்-10 கார்களின் பட்டியலில் முதல் 3 மாடல்கள் மாருதி சுஸுகியின் மாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 2022 இல் அதிகம் விற்பனையான முதல் 3 கார்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இவை மூன்றும் மாருதி சுஸுகி மாடல்கள்தான். இதில் மாருதி சுஸுகி ஆல்டோ, மாருதி சுஸுகி வேகன் ஆர் மற்றும் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் ஆகியவை அடங்கும். இவற்றில் அனைத்தையும் விட மலிவான கார் ஆல்டோ ஆகும். இதன் விலை ரூ.3.4 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
மாருதி சுஸுகி ஆல்டோ
அக்டோபர் 2022 இல் மிக அதிகமாக விற்பனையான கார் மாருதி சுஸுகி ஆல்டோ ஆகும். கார் தயாரிப்பாளர் மாருதி, சமீபத்தில் புதிய ஆல்டோ கே10 ஐ அறிமுகப்படுத்தியது. இது புதிய இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது. மேலும் இதில் கே-சீரிஸ் எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த அம்சம் விற்பனைக்கு உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.
மாருதி சுஸுகி கடந்த மாதம் 21,260 ஆல்டோ கார்களை விற்றது. இது முந்தைய ஆண்டை விட 22 சதவீத அதிக வளர்ச்சியைக் காட்டுகிறது. அக்டோபர் 2021 இல், மாருதி சுசுகி 17,389 யூனிட்களை விற்றது.
மேலும் படிக்க | Car Loan Tips: கார் கடன் வாங்கும் முன் இந்த விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்
மாருதி சுஸுகி வேகன் ஆர்
மாருதி சுஸுகி வேகன்ஆர், பல ஆண்டுகளாக நிறுவனத்தின் அதிகம் விற்பனையான காராக இருந்து வருகிறது. அக்டோபர் 2022 இல் இது அதிகம் விற்பனை ஆக இரண்டாவது காராக உள்ளது. இது இரண்டு இன்ஜின் ஆப்ஷன்கள், CNG வகைகள் மற்றும் இரண்டு கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் நல்ல ஹெட்ரூமுடன் வருகிறது. அக்டோபர் 2022 இல், மாருதி சுசுகி வேகன் ஆர் 17,945 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இதன் விற்பனை ஆண்டுதோறும் 45 சதவீதம் அதிகரித்துள்ளது. அக்டோபர் 2021 இல், 12,335 யூனிட்கள் விற்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
அக்டோபர் 2022 இல் சிறந்த விற்பனையில் சாதனை படைத்த கார்களில் மூன்றாவது இடத்தைப் பிடிப்பது மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் ஆகும். அக்டோபர் 2021 இதன் 9,180 யூனிட்கள் விற்கப்பட்டன. அதை ஒப்பிட்டு பார்த்தால், கடந்த மாதம் மாருதி சுசுகி 17,231 யூனிட்களை விற்று இதன் விற்பனையில் ஆண்டுக்கு 88 சதவீதம் அதிகரிப்பைக் கண்டுள்லது. மாருதி இப்போது ஸ்விஃப்ட்டில் சிஎன்ஜி கிட்டையும் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | இந்தியாவின் ஆடம்பர மின்சார கார்கள்! ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் விலை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ